Site icon Thanjavur News

“Maveeran,” Starring Sivakarthikeyan, has a new Poster. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ‘டான், பிரின்ஸ்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

‘அயலான்’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மடோன் அஸ்வின் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இனையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Exit mobile version