தஞ்சை மாநகராட்சியை பொருத்தவரை வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி மென் மேலும் அலங்கரிக்கபடுகிறது.. நடுத்தர மக்கள் வாழும் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளின் சாலை ஓரங்களை மெருகூட்டுவதற்கு செலுத்தும் அக்கறையில் சிறு துளியை கூட மற்ற பகுதிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் செலுத்துவதில்லை..
தஞ்சை பர்மாகாலனி மாரிகுளம் சுடுகாட்டை ஓட்டிய சாலையில் உள்ள பாதாள சாக்கடை எப்போதும் சாலை மற்றும் அருகிலுள்ள மழை நீர் வடிகாலில் வழிந்தோடுகிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போதே துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதன் அருகில் வசிப்பவர்களின் நிலையை சொல்லவே தேவையில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி சார்பில் இதுவரை எந்த முயற்சியும் இல்லை.
தஞ்சை மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது.. மற்ற பகுதிகளில் இது போல் அலட்சியம் காட்டபடுவதில்லை.. மேலும் தஞ்சை பூக்கார தெரு சுப்ரமணியர் சுவாமி கோவில் அமைந்துள்ள பூச் சந்தை சாலை முழு ஆக்கிரமிப்பில் உள்ளது.. இந்த சாலையை பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூட எந்த தடங்கலும் இல்லாமல் கடந்து செல்ல முடிவதில்லை..
இந்த சாலையை அகலபடுத்தவும் மாநகராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் இல்லை மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதை தொடர்ச்சியாக முறைபடுத்துவதிலும் அதிகாரிகள் அக்கரை செலுத்துவதில்லை. மேலும் தஞ்சை மாநகராட்சி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள விளார், புதுப்பட்டினம் மற்றும் நாஞ்சிகோட்டை ஊராட்சி பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது.
சில தனிநபர் லாபத்திற்காக பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.. மழை காலங்களில் இதன் பாதிப்பு அதிகமாக வாய்ப்புள்ளது. எனவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தால் நல்லது. மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி மேயர் அவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை எடுத்தால் இந்த பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக அமையும்