Site icon Thanjavur News

Jyothika with Mammootty-First look poster goes viral

ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் ‘காதல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சென்னை, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, ’36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா மலையாள சினிமாவில் நடிக்கிறார்.

கடைசியாக 2009 இல் வெளியான ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை வெளியிட்டுள்ளது.

இந்த படத்திற்கு படக்குழு ‘காதல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Exit mobile version