ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையில், ரோஹித் சர்மாவை தினேஷ் கார்த்திக் சமன் செய்தார். மும்பை, ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தக்காரராக உள்ளார். அவர் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், இந்த மோசமான சாதனை பட்டியலை தற்போது தினேஷ் கார்த்திக் சமன் செய்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் மொத்தம் 16 முறை டக் அவுட் ஆகியுள்ளார். அத்துடன், இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ள ரோகித் சர்மாவுடன் இணைந்துள்ளார்.
இந்த வரிசையில் சுனில் நரேன் மற்றும் மந்தீப் சிங் (தலா 15), அம்பத்தி ராயுடு (14), ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, மேக்ஸ்வெல், பார்த்தீவ் படேல், ரகானே, மனீஷ் பாண்டே(தலா 13 முறை), கவுதம் கம்பீர்(12 முறை), அஸ்வின், டி வில்லியர்ஸ், வார்னர், கோலி ஆகியோர் (தலா 10) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.