அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ திட்டத்தை மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனால் பல லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் காண்போம்.
மருத்துவ திட்டம்:
இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளும் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இத்தைகைய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிட்ட தொகையினை நிர்ணயம் செய்து அதற்குள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வரையறையை பின்பற்றி வருகிறது.
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் 22 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் உட்பட 75 லட்சத்திற்கும்
மேற்பட்டவர்களுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். தீன்தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவ திட்டத்தின் கீழ் அரசு நடத்தும் நிறுவனங்கள், மருத்துவ கல்லூரிகள், மற்றும் மருத்துவமனைகளில் பணியாற்றும் தகுதியானவர்கள் எந்த வித வயது வரம்பும் இல்லாமல் இந்த பணமில்லா மருத்துவ வசதியினை பெற முடியும். மேலும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் வரிசை பட்டியலில் சேர்க்கப்பட்ட மருத்துவமனைகளில் 5 லட்சம் வரையிலான மருத்துவ வசதிகளும் கிடைக்கிறது.
பணமில்லை மருத்துவ வசதியை தொடங்கி வைத்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், தீன்தயாள் உபாத்யாயா அரசு ஊழியர்களுக்கான பணமில்லா மருத்துவ திட்டத்தின் கீழ் தகுதியான பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சுகாதார அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் மாநில சுகாதார அட்டையை தாங்களே பதிவிறக்கம் செய்து கொண்டு அரசு அல்லது எம்பேணல் செய்யப்பட்ட மருத்துவமனைகளில் பணமில்லா மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது என்றும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பங்களுக்கு முக்யமந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்குவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.