Site icon Thanjavur News

In Thanjavur, a school teacher jumped into the river and engaged in a dawn protest.

தஞ்சையில், பள்ளி ஆசிரியை ஆற்றுக்குள் இறங்கி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சங்கிலியை பறித்து சென்றது குறித்து யாரும் கேட்காததால் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

ஆற்றுக்குள் இறங்கிய ஆசிரியை தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் ஹரி நகரை சேர்ந்தவர் ரேவதி. இவர், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பகல் 12 மணி அளவில் இவர் வெண்ணாற்றங்கரையில் உள்ள விடுதி அருகே நடந்து சென்றார். பின்னர் அருகில் திடீரென ஆற்றுக்குள் இறங்கினார்.

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆசிரியை ரேவதியை ஆற்றில் இருந்து வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ரேவதியின் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அழைத்தும் ரேவதி ஆற்றில் இருந்து வெளியே வரவில்லை.

அவரை யாராவது அழைத்து வர சென்றாலும் தனது அருகில் வருபவர்கள் மீது அவர் தண்ணீரை வாரி இறைத்தார். இதனால் சிறிது நேரம் நின்று விட்டு வந்து விடுவார் என நினைத்து அவர்கள் சென்று விட்டனர்.

விடிய, விடிய…… ஆனால் ரேவதி ஆற்றை விட்டு வெளிேய வரவில்லை. விடிய, விடிய அவர் தண்ணீரில் நின்று கொண்டிருந்தார். நேற்று நண்பகல் 12 மணி ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

இந்த நிலையில் பள்ளியக்ரஹாரத்தில் நேற்று நடந்த மாநகராட்சி பகுதிசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஆனால் அவர்களால் ரேவதி ஆற்றில் இறங்கி நின்ற இடத்திற்கு செல்ல முடியவில்லை. வழியில் கருவேலமரங்களும், சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் அவர்கள், ரேவதியை வெளியே வருமாறு அழைத்தும் அவர் வரமறுத்து விட்டார். தீயணைப்பு வீரர்கள் மீட்டனர் இது குறித்து தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நிலைய தீயணைப்பு அலுவலர் சரவணமுத்து தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி அங்கிருந்து ரேவதியை மீட்டனர். பின்னர் அவரை டியூப்பில் உட்கார வைத்து தூக்கிக்கொண்டு கரைக்கு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது சம்பவத்தன்று தான் வீட்டுக்கு நடந்து வந்தபோது தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை மர்ம நபர்கள் அறுத்துக்கொண்டு ஓடியதாகவும், இது குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தும் யாரும் கேட்காததால் ஆற்றில் இறங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும் ரேவதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தெரிய வந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதி தண்ணீரில் வெகுநேரமாக நின்றதால் அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவர் ஆம்புலன்சில் ஏற மறுத்தார். அவரை வலுக்கட்டாயமாக ஏற்றினர்.

அப்போது அவர் ஆம்புலன்ஸ் கதவை மூட விடாமல் பிடித்துக்கொண்டு தள்ளினார். பின்னர்அவரை சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர்.

Exit mobile version