Site icon Thanjavur News

Immersion in goddess temples

கும்பகோணம், கீழ கபிஸ்தலம், கரம்பயத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது.

தஞ்சாவூர் கும்பகோணம் தோப்புத் தெரு பின்புறம் காந்தி காலனி பகுதியில் உள்ள காளிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.

திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக பூஜை, வாஸ்து பூஜை, கோ பூஜை நடந்தது. மறுநாள்(21-ந் தேதி) காலை 2-ம் கால விக்னேஸ்வர பூஜை, யாக பூஜைகள், நாடிசந்தானம், மஹாபூர்ணாஹூதி, மகாதீபாராதனை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும், அதனைத்தொடர்ந்து விமான கோபுர கலசத்திற்கு மகா குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடந்தது.

கீழகபிஸ்தலம் இதேபோல கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் கூத்தனாம் தோப்புத்தெரு மெயின் ரோடு காவிரி கரையோரம் அமைந்துள்ள உச்சி மகா காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடு, அங்குரார்பணம், யாகசாலை பூஜைகள் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரம்பயம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, காசாங்காடு, அக்கரவயல் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட அக்கினி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கதிராளம்மன் கோவில் குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Exit mobile version