விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வு குழு கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது கடைபிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது கூட்டத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிபர் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறுகையில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள அமைக்கப்பட உள்ள இடம் தனியாருக்கு உரிமையானது எனில் அவரிடம் ஆட்சேபனை இன்மை சான்று பெற வேண்டும் ஒலிபெருக்கியை பயன்படுத்த போலீசாரிடம் அனுமதி பெறவேண்டும் பூஜை நடைபெறுகின்ற காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளதால் பெட்டி வடிவ ஒலிபெருக்கி மட்டுமே பயன்படுத்த வேண்டும்
சிலைகளின் உயரமானது வைக்கப்பட உள்ள மேடையுடன் சேர்ந்து 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் சிலைகளை பிறமதன் சார்ந்த இடங்கள் மருத்துவமனைகள் கல்வி நிறுவனங்கள் அருகில் நிறுவக்கூடாது எத்தகைய நச்சுத்தன்மை கலக்காத களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை வைக்க வேண்டும் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்ட நாளிலிருந்து ஐந்து நாட்களுக்குள் கரைக்கப்பட வேண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள வடவாரு கல்லணை கால்வாய் காவிரி ஆறு வீரசோழன் ஆறு மற்றும் கடலில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் மினி லாரி டிராக்டர் மூலமாக மட்டுமே சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும் மாட்டு வண்டி மூன்று சக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை விநாயகர் சிலைகள் ஊர்வலம் மற்றும் கரைக்க கூடிய இடங்களில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ரவளி பிரியா கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜன் கூடுதல் போலீஸ் ஜெயச்சந்திரன் வருவல் கோட்டாட்சியர் ரஞ்சித் தாசில்தார் மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.