Site icon Thanjavur News

Flower sprinkling ceremony at Punnainallur Mariamman temple next to Thanjavur

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன்கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.

மேலும் இங்குள்ள அம்மனுக்கு பூச்சொரிதல் விழா ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. சுக்ரவார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, மாரியம்மன் கோவில் அன்னதான அறக்கட்டளை, அர்ச்சகர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் கிராம வாசிகள் சார்பில் இந்த பூச்சொரிதல் நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூ ரதங்கள் மந்திர கோஷங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்படும்.

பூச்சொரிதல் விழா அதன்படி பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட பூ ரதங்கள் தஞ்சை பெரிய கோவிலுக்கு நேற்று மாலை வந்தடைந்தது. இந்த ரதங்கள் அலங்கரிக்கப்பட்டு அதில் மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டு இருந்தது. மேலும் வாகனங்களில் அம்மன் படங்களும் வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு மேலவீதி, வடக்கு வீதி, காமராஜ் மார்க்கெட், கீழவீதி, கீழவாசல், வண்டிக்காரத்தெரு, தொம்பன்குடிசை வழியாக மாரியம்மன்கோவிலை இன்று (வெள்ளிக்கிழமை) காலை சென்றடையும், பின்னர் அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் நடைபெறுகிறது பூ ரத ஊர்வலம் பூ ரத ஊர்வலத்தை சுக்ர வார வழிபாட்டுக்குழு தலைவர் கேசவன் முன்னிலையில் ஓய்வு பெற்ற போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் சன்னிதானம் வாமதேவ சிவாக்கிரயோகிகள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதற்கான ஏற்பாடுகளை சுக்ர வார வழிபாட்டுக்குழு, பூச்சொரிதல் கமிட்டி, அன்னதான அறக்கட்டளை, ஆலய அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Exit mobile version