Site icon Thanjavur News

Do you Understand what a Snake in your Dream Means?

மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கேட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஜோதிடத்தின்படி, யாருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறதோ, அவர்களின் கனவில் பாம்பு வரும் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, பாம்பு பாலியல் குறியீடாகவும் கருதப்படுகிறது.

அதே போல, ஆண்களுடனும் பாம்பு ஒப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு பாம்பு உங்கள் படுக்கையில் விழுவது போல கனவு கண்டால் அது பாலியல் சிற்றின்பத்தின் அடையாளமாக காணப்படுகிறது. நமக்கு பாம்பு குறித்த கனவு வந்தால், என்ன அர்த்தம் என்பதை இங்கே காணலாம்.

இயல்பாக நமது கனவில் பாம்பு வந்தால், நமது குலதெய்வ வழிபாடு விடுபட்டுள்ளதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அதாவது, குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்கள…


கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். எனவே, இதை சுலபமாக எடுக்க வேண்டாம். அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யவும். அதுவே, ஒரு பாம்பு உங்கள் காலைச்சுற்றி பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் சனி பகவான் பிடிக்கப் போகிறார் என கூறப்படுகிறது.


கனவில் பாம்பு உங்களை கடித்தால்…

கனவில் பாம்பு நம்மை கடித்தால், அது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. ஏனென்றால், இவ்வளவு நாள் நம்மை பிடித்திருந்த பீடை விளக்கப்போகிறது என அர்த்தம். அத்துடன், நமது கஷ்டம் மற்றும் வறுமை நம்மை விட்டு விளக்கப்போகிறது என்று அர்த்தம். தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

​வீட்டுக்குள் இருந்து பாம்பு வெளியே சென்றால்…

ஒரு பாம்பு உங்கள் வீட்டிற்குள் வந்துவிட்டு, எதுவும் செய்யாமல் அமைதியாக வெளியே செல்வதை போல நீங்கள் கனவு கண்டால், நீங்கள் வேண்டிய நேத்திக்கடனை விரைவில் செலுத்த வேண்டும் என்பது பொருள். இதுவே, அந்த பாம்பு உங்களின் தலைக்கு மேல் குடை பிடிப்பது போல நின்றால், தெய்வத்தின் அனுசரணை மற்றும் பார்வை உங்கள் குடும்பத்தின் மீது உள்ளது என கருதப்படுகிறது.

பாம்பு யார் மீதாவது ஏறிச்செல்வது போல கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று அர்த்தம். அரசியல்வாதிகளுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

​கனவில் பாம்பை கொன்றால்…

உங்கள் கனவில் நீங்கள் ஒரு பாம்பை கொன்றாலோ அல்லது பாம்பு இறந்து கிடப்பதை கண்டாலோ உங்களுக்கு வர இருக்கும் ஆபத்து விலகிவிட்டது என அர்த்தம். இருப்பினும் அனைத்து விஷயத்திலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. உங்களுக்கு ஏற்பட்டிருந்த வியாதி குணமாகும் என்றும் பொருள்படும். ஆக மொத்தத்தில் இது சுபமான விஷயம்.

​நல்ல பாம்பு கனவில் வந்தால்…

ஜோடியாக இல்லாமல், ஒற்றை நல்ல பாம்பு உங்கள் கனவில் வந்தால் உங்களுக்கு விரோதிகளால் தொல்லை உண்டாகப்போகிறது என கூறப்படுகிறது. சொத்து மற்றும் நில பிரச்சனைகள் இருந்தால் அதில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இதுவே, உங்கள் கனவில் நல்ல பாம்பு ஜோடியாக வந்தால், அது நல்ல சகுனம். உங்களுக்கு சாதகமான செயல்கள் நடக்கும். நேரமும் காலமும் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

​கனவில் பாம்பை கையில் பிடித்தல்…

பாம்பை கையில் பிடிப்பதை போன்ற கனவு உங்களுக்கு வந்தால், சுபமாக கருதப்படும். இதன் அர்த்தம், உங்களுக்கு தனலாபம் உண்டாகப்போகிறது என அர்த்தம். செல்வா செழிப்பு பெரும். இதுவே பாம்பு உங்களை, விடாமல் துரத்தினால் உங்களுக்கு வறுமை உண்டாகப்போகிறது என அர்த்தம்

Exit mobile version