Site icon Thanjavur News

CM Announces Tamil Nadu Best Weaver Awards 2022!

தமிழகத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மேலும் பரிசு பெற்றவர்களின் விவரங்களை இந்த பதிவின்  மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக அரசு:

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் அனைத்து துறைகளும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய தமிழக அரசு மக்களுக்கு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

அந்த வகையில் 2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருது முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுகளுக்கான முதல்பரிசு தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் வரையிலும் இரண்டாம் பரிசு தொகை 75 ஆயிரம் ரூபாயிலிருந்து 3 லட்சம் வரையிலும் மூன்றாம் பரிசு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 2 லட்சம் வரையிலும் உயர்த்தி வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  2021-22-ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு திருபுவனம் பட்டு கைத்தறி  நெசவாளர்   கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் முருகனுக்கும், இரண்டாம் பரிசு காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி  நெசவாளர்   கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் ஞான சுந்தரிக்கும், மூன்றாம் பரிசு ஆரணி பட்டு கைத்தறி  நெசவாளர்   கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் இளங்கோவுக்கும் வழங்கப்பட்டது.

இதே போல் பருத்தி ரகத்திற்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கான முதல் பரிசு மகாகவி பாரதியார் கைத்தறி நெசவாளர்  கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் சரவணனுக்கும், இரண்டாம் பரிசு சிவசக்தி கைத்தறி நெசவாளர்  கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பாலனுக்கும், மூன்றாம் பரிசு மோதிலால் நேரு கைத்தறி நெசவாளர்  கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்  சந்திரலேகாவுக்கும் என  விருத்தாளர்களுக்கு மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை  முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் சிறந்த கைத்தறி  ஏற்றுமதி விருதுக்கான முதல் பரிசு சென்னை-அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (கோ-ஆப்டெக்ஸ்)-க்கும், மூன்றாம் பரிசு ஈரோடு-சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும், என 3 விருதாளர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Exit mobile version