Site icon Thanjavur News

Border – Gavaskar Test: India in strong position – All out for 400 in first innings…!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. உணவு இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்க உள்ளது.

Exit mobile version