Author: Karthick

பதிப்பாளர்கள் – எழுத்தாளர்கள் – வாசகர்களின் மிகப்பெரிய கூடலான சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்து, முத்தமிழறிஞர் கலைஞர் பெயரிலான பொற்கிழி விருதுகளை வழங்கி மகிழ்ந்தேன். நூல்வெளி, ஆய்வுக்களம், அறிவுத்தளம் என நமது அரசு போட்டு வருவது எட்டுக்கால் பாய்ச்சல். அறிவுத்தீ பரவட்டும்!

Read More

மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற, தமிழக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் முதல் முறையாக திருநங்கைகளுக்கான சிறப்பு புறநோயாளிகள் பிரிவையும், மேலும் இம்மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகத்தின் பங்களிப்புடனும், Menadora Foundation என்ற அரசுசாரா தொண்டு நிறுவனம் துணையுடன் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய மது, போதை பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையத்தையும் தொடங்கி வைத்த போது.

Read More

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்தியாவும், புனேயில் நடந்த 2-வது அட்டத்தில் 16 ரன் வித்தியாசத்தில் இலங்கையும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. புனேயில் நடந்த முந்தைய ஆட்டத்தில் இந்தியாவின் பந்துவீச்சு மற்றும் பீல்டிங் படுமோசமாக இருந்தது. குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் 5 நோ-பால்கள் வீசி அதற்கு பிரீஹிட்டும் வீசியது தான் இந்தியாவுக்கு பின்னடைவாக அமைந்தது. 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ நோ-பால் வீசிய முதல் பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்தார். அவர் 2 ஓவர்களில் 37 ரன்களை வாரி இறைத்தார். இதே போல்…

Read More

ஒரு தங்க ஆபரணம் உங்கள் கைகளையும் காதுகளையும் கழுத்தையும் அலங்கரிக்கும் முன் கடந்துவரும் பாதை கொஞ்சநஞ்சமல்ல. பலரின் உழைப்பும் முயற்சியுமே இறுதிப்பயனாக நகையென உருவெடுத்து நம் கைக்கு வருகிறது. பெரும்பான்மை இந்தியர்கள் விரும்பும் நகைகள் தங்க நகைகளாகவே இருக்கின்றன. ராஜாங்கங்களின் சக்தியைத் தீர்மானிக்கும் இந்த உலோகம் எப்படி உருவானது எனத் தெரியுமா? ஆஸ்டெக் பழங்குடியின மக்கள் தங்கம் என்பது ‘சூரியனின் வேர்வை’ எனக் கருதினர். இது உண்மையல்ல என்றாலும், இதைத் தங்கத்துக்கு ஏற்ற மிகத் துல்லியமான உவமை எனலாம்! பிரபஞ்சத்தில் காணப்படும் கோடானு கோடி நட்சத்திரங்களை இயக்கிக் கொண்டிருப்பது அணுக்கரு பிணைவு (Nuclear Fusion) எனும் செயல்பாடாகும். பிரபஞ்சம் தோன்றியபோது ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகிய இரு அணு வகைகளே உருவாகியிருந்தன. இப்போது நாம் காணும் பெரும்பாலான நட்சத்திரங்கள் ஹைட்ரஜன் அணுக்களால்தான் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றிணைந்து அதைவிட எடை அதிகமான ஹீலியம், கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய தனிமங்களை…

Read More

மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்க, ரியான் டெக் நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தும் சாதனம்&வரைப்பட்டிகை ஆகிய தொழில்நுட்பச் சாதனங்கள் உதவியுடன் ஆசிரியர்&மாணவர்களின் கற்றல்-கற்பித்தலை எளிமையாக்கும் முறையை சிந்தாதிரிப்பேட்டை ‘சென்னை உயர்நிலைப்பள்ளி’யில் இன்று தொடங்கிவைத்தோம்.

Read More
Job

Kasikannu catering is an award-winning catering service in Chennai and is the food service provider with the largest number of chefs in Chennai (over 375 chefs!). Driven by the philosophy that satisfied customers are the best asset and any investment to enhance customer satisfaction is the best investment, Kasikannu brings a fresh perspective to the domain of marriage catering in Chennai. We desire to exceed customer expectations and bring total perfection to our every activity to make your life events even more memorable. Driven by a passionate team and dedicated leadership, we set and adhere to high standards always. Position…

Read More

மேட்டூா் அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 117.74 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,122 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,715 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 6,007 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 2,017 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,057 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

Read More

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை, இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக அணியை வழிநடத்தினார். இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தசுன் ஷனகா பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இளம் வீரர்கள் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இலங்கை வீரர் கசுன் ரஜிதா வீசிய முதல் ஓவரில் 17 ரன்கள் குவித்த…

Read More

திருக்காட்டுப்பள்ளியில் அறுவடைக்கு தயாராக மஞ்சள் பயிர்கள் உள்ளன. இந்த மஞ்சளுக்கு உரிய விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா். பொங்கல் பண்டிகை தைப்பொங்கல் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு திருநாள். இத்திருநாள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படும். புதிய மண் பானையில் மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து கட்டி, மண் அடுப்பில் விறகு மூலம் புத்தரிசி, வெல்லம் போட்டு பொங்கலிட்டு, பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு, பொங்கல் வைப்பார்கள். சர்க்கரை பொங்கல் மட்டும் இல்லாமல் வெண்பொங்கலும் சமைப்பார்கள். பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, ஆகியன முக்கியமானவை ஆகும். விவசாயிகள் நம்பிக்கை திருக்காட்டுப்பள்ளி பகுதியில் காவிரி கரையோரம் உள்ள வளப்பகுடி உள்ளிட்ட பல கிராமங்களில் பொங்கல் கரும்பு பயிரிட்டு தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இதைப்போல பொங்கல் பானையை சுற்றி கட்டப்படும் மஞ்சள் கொத்து வளப்பகுடியில் பயிர் செய்யப்பட்டு…

Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வருடம் ‘டான், பிரின்ஸ்’ படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ‘அயலான்’ படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. தற்போது ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். மடோன் அஸ்வின் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. https://twitter.com/ShanthiTalkies தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படமும் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாவீரன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இனையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Read More