Author: Karthick

தமிழில் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபட்டுள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு பக்தர்களின் அரோகரா முழக்கம் விண்ணை முட்டிய நிலையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். குடமுழக்கு விழாவிற்காக, கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு…

Read More

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த ஒருநாள் போட்டி தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் களம் இறங்குகிறது. துணைகேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டி அணியின் வருங்கால கேப்டனான உருவெடுக்க வசதியாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது தலைமையில் சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது நினைவுகூரத்தக்கது. நியூசிலாந்துக்கு…

Read More

தஞ்சையில் நடந்த குடியரசு தின விழாவில் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். குடியரசு தின விழா தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களை கவுரவித்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக அவர் சமாதான புறா மற்றும் மூவர்ண பலூன்களையும் பறக்க விட்டார். பின்னர் 672 பயனாளிகளுக்கு ரூ.50 லட்சத்து 8 ஆயிரத்து 965 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய 141 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். ரூ.50 லட்சம் நலத்திட்ட உதவி விழாவில் முன்னாள் படைவீரர்கள் நலத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்குரூ.4 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்…

Read More

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாா் வி.கே.சசிகலா. மொழிப்போா் தியாகிகள் நாளையொட்டி, தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மொழிப்போா் தியாகிகள் படத்துக்கு புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: மக்களவைத் தோ்தல் கூட்டணி குறித்து ஏற்கெனவே கூறியுள்ளேன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் முடிவு தாக்கத்தை ஏற்படுத்தும். அது எந்த மாதிரி என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள். இந்த இடைத்தோ்தலில் பிரசாரம் செய்வது குறித்து பின்னா் சொல்கிறேன். விருந்தோம்பலை கொண்டாடுபவா்கள்தான் தமிழ் மக்கள். இந்நிலையில், ஆளுநரின் தேநீா் விருந்தை தவிா்ப்பது என்பது தமிழ்நாட்டுக்கு அழகல்ல என்றாா் சசிகலா.

Read More

தேசிய சுற்றுலா தினம், குடியரசு தின விழாவையொட்டி தஞ்சாவூா் அருங்காட்சியகத்தில் தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சி குழுமம் சாா்பில் 5 நாள் கலாசார திருவிழா புதன்கிழமை மாலை தொடங்கியது. இவ்விழாவை மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நடராஜா நாட்டிய குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி, நடுவூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளின் மேற்கத்திய குழு நடனம், குலமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவிகளின் கிராமிய நடனம், கள்ளப்பெரம்பூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவியின் நாட்டுப்புற பாடல், கும்பகோணம் அன்னை கலை கல்லூரியின் கொக்கலிக்கட்டை, மயிலாட்டம், கரகாட்டம், துளசிராமன் குழுவினரின் சிலம்பாட்டம், கலைமாமணி தேன்மொழி ராஜேந்திரனின் கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா், செயற் பொறியாளா் எஸ். ஜெகதீசன், மாவட்டச் சுற்றுலா அலுவலா் கே. நெல்சன், சுற்றுலா ஆலோசகா் ஆா். ராஜசேகரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் எம்.ஜி. ரவிச்சந்திரன், இன்டாக் கௌரவ செயலா்…

Read More

யார் அசீமுக்கு ஓட்டுப் போட்டது? பிக் பாஸ் தேர்வும், புலம்பும் மக்களும் ! விஜய் டிவி மீது தங்கள் எதிர்ப்பை சொல்லி வருகிறார்கள் மக்கள். அசீம் வெற்றி பெற்றதன் அதிர்வலைகள் நம் வீடுகளிலும் பிரதிபளிப்பதை காண முடிகிறது. அசீமுக்கு போய் எப்படி ? பெண்களை எவ்வளவு மோசமா பேசுனான்… எல்லாரையும் எவ்வளவு மட்டம் தட்டி பேசுனான்… அவனுக்கு போய் எப்படி பிக் பாஸ் டைட்டில் வின்னர் கொடுத்தாங்க…இது மோசடி…ஏமாற்றும் வேலை என செம கடுப்பில் இருப்பதை பார்க்க முடிகிறது. யார் அசீமுக்கு ஓட்டு போட்டது ? எதுக்காக ? ஏன் விக்ரமன் தோல்வி அடைந்தார் ? என மக்கள் கேட்கும் அந்த இரு கேள்விகள் தான் மிக சுவாரஸ்யமானவை. அந்த தேடலில் மக்கள் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். அரசியல் தேர்தல்களில் மக்கள் எப்படி வாக்களிக்கிறார்கள் என்பதற்கான ஒரு புரிதலை ஏற்படுத்தவும் இது உதவி செய்கிறது. அசீம் தவறு செய்திருக்கார்… சரியில்லை என…

Read More

தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள்.‌.அதுவும் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். அதற்குறிய அடிப்படை வசதிகள் இருந்தும் சரியாக பராமரிக்கப்படாமல் உள்ளது.கட்டணமில்லா கழிப்பறை ஒன்று தொல்லியல் துறை அலுவலக வளாகத்தில் இருக்கிறது.அதில் அடிக்கடி வடிகால் நிரம்பி உபயோகிக்க முடியாத நிலையில் உள்ளது.அதன் வழி காட்டி பலகை தான் கீழே உள்ள புகைப்படம்.தினமும் கோயிலுக்கு சென்று வரும் போது நிறைய வெளியூர் பக்தர்கள் குறிப்பாக பெண் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள்..இதை விட்டால் கோயிலுக்கு வெளியே சுமார் அரை கிமீ தூரத்தில் கார் நிறுத்துமிடத்தில் தான் கட்டணக்கழிப்பிடம் உள்ளது.அதேபோல் RO water provision கோயில் உள்ளே இருக்கிறது.அதுவும் நிரந்தரமாக வேலை செய்வதில்லை .அவ்வப்போது தான் வேலை செய்கிறது. தஞ்சை மாவட்ட நிர்வாகம் தஞ்சை மாவட்ட பொறுப்பு மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் இந்த விசயத்தில் தலையிட்டுபக்தர்களின் அடிப்படை வசதிகளை…

Read More

அனைத்து பூச்சி மற்றும் பிற விஷ உயிரினங்கள் கடிகளுக்கான எளிய இயற்கை மருத்துவம் ! மிக முக்கிய குறிப்பு குறிப்பெடுத்து பாதுகாத்து கொள்ளுங்கள் எளிதில் கிடைக்காத சில மூலிகை செடிகள் இருந்தால் அவற்றை வீட்டில் வளர்ப்பது நல்லது. தேன் குளவி கொட்டியதற்கு……. தேய்க்க கூடாது விஷம் இறங்கி வலி அதிகமாகும். முள்ளை எடுத்துவிட்டு கொடுக்கு இருந்தாலும் எடுத்துவிட்டு மண்ணெண்ணெய் கடித்த இடத்தில் தேய்க்கவும்… பூரான் கடிக்கு……… பூராண் கடித்து விட்டால் விஷம் பரவி தடிப்பு ஏற்படும் அரிப்பு எடுக்கும்…. சுண்ணாம்பு மஞ்சள், உப்பு 3 ஐயும் சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் தேய்த்து கொண்டே இருந்தால் விஷம் இறங்கும்… பூனை கடித்து விட்டால்…. பூனை கடித்து விட்டால் மஞ்சள் சுண்ணாம்பு இவைகளை சம அளவு எடுத்து அரைத்து கடித்த இடத்தில் பூச குணமாகும்… கம்பளி பூச்சி கடி… ரோமம் பட்ட இடத்தில் அரிப்பு விக்கம் ஏற்படும். நல்லெண்ணெய் தேய்த்து…

Read More
Job

தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இடைநிலை சுகதார பணியாளர்கள் உள்பட காலியாக உள்ள ஏராளமான செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்பட்டு வருகிறது. கிராமங்கள் முதல் நகர்புறங்கள் வரை மாவட்ட வாரியாக ஒவ்வொரு பணியிடங்களை நிரப்புவதற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் தற்போது தஞ்சாவூர் மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலியிடங்கள் எவ்வளவு? தஞ்சாவூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் மருத்தும் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள 140 செவிலியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள்…

Read More

பிக் பாஸ் 6 டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ் தான். தற்போது நடைபெற்று வரும் ஆறாவது சீசனின் இறுதி நாள் இன்று ( ஜனவரி 22) மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் 21 நபர்கள் கலந்துகொண்ட நிலையில் சுமார் 17 போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் மைனா நந்தினி பிக் பாஸ் வீட்டில் மிட் நைட் எவிக்‌ஷன் என்ற பெயரில் வெளியேற்றப்பட்டார். இதனால் அசீம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்களும் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த மூன்று பேரில் யார் டைட்டில் வின்னர் ஆக தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிந்து கொள்ள அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இறுதி நாள் என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான ஓட்டிங் மிகவும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தில் சின்னத்திரை பிரபலத்தில்…

Read More