Author: Karthick

பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. கேப்டவுன், 8-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 10-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியாவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின. நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம் (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், அயர்லாந்து (பி பிரிவு) அணிகள் அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின. முதலாவது அரைஇறுதியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 5 ரன் வித்தியாசத்தில் இந்தியாவையும், இரண்டாவது அரைஇறுதியில் தென்ஆப்பிரிக்க அணி 6 ரன் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியனான இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி கேப்டவுனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள்…

Read More

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மாரியம்மன்கோவில் மின்பாதை, ஆலங்குடி மின்பாதை, போஸ்டல்காலனி மின்பாதை ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் வருகிற 28-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம் நகர், ஆலங்குடி, களக்குடி, நெட்டாநல்லூர், பை-பாஸ், சித்தர்காடு, கடகடப்பை, காந்தாவனம், எடவாக்குடி, நெல்லித்தோப்பு, அன்னை இந்திராநகர், பனங்காடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

கோடைகாலத்தில், லேசாக குளிர்விக்கப்பட்ட கரும்புச்சாறுடன், எலுமிச்சை மற்றும் இஞ்சிச்சாறு கலந்து பருகினால், உடனடியாக உடல் புத்துணர்ச்சி அடைவதை நம்மால் உணர முடியும். கரும்புச்சாறு நாவிற்கு சுவையூட்டுவது மட்டுமில்லாமல், ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. தண்ணீர், நார்ச்சத்து மற்றும் சுக்ரோஸ் நிறைந்த கரும்புச்சாறு, பாரம்பரிய மருத்துவத்தில் ஆரோக்கிய பானமாக பரிந்துரைக்கப்படுகிறது. கரும்புச்சாற்றில் உள்ள நன்மைகள் பற்றிய மேலும் பல தகவல்கள் இதோ ஆற்றலை அதிகரிக்கும்: உடலுக்கு ஆற்றலை வழங்கும் முக்கியமான மூலப்பொருளான சுக்ரோஸ், இயற்கையாகவே கரும்புச்சாற்றில் நிறைந்துள்ளது. இது உடலில் சர்க்கரை அளவை சீராக்க உதவும். செல்களுக்கு போதுமான நீர்ச்சத்தைக் கொடுக்கும். உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும். காலை உணவோடு ஒரு டம்ளர் கரும்புச்சாறு பருகினால், நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். காபிக்கு மாற்றாக கரும்புச்சாறு பருகுவது உடலுக்கு நல்லது. செரிமானத்தை சீராக்கும்: கரும்புச்சாற்றில் நிறைந்திருக்கும் பொட்டாசியம், வயிற்றின் அமில காரத் தன்மையை சமநிலைப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்தும். மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்கள்,…

Read More

அதானி குழுமத்திற்கு இது போறாத காலம் என்றே கூறலாம். அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அடுத்தடுத்து பல பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்தின் சில பங்குகளின் தர மதிப்பினை மூடீஸ் நிறுவனம் ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து, நெகட்டிவ் ஆக தரமிறக்கியுள்ளது. அதானி பங்குகள் சரிவு இந்த அறிவிப்புக்கு பிறகு அதானி குழும பங்குகள் பலவும் கடும் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% சரிவினைக் கண்டும், அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் 5% மேலாக சரிவினைக் கண்டும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 5% குறைந்தும் சரிவிலும் காணப்படுகின்றது. மற்ற அதானி பங்குகளும் சரிவு அதானி கிரீன் எனர்ஜி 5% சரிவினைக் கண்டும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 5% சரிவினையும், அதானி வில்மர் பங்கு…

Read More

மகாசிவராத்திரி..சிவன் அருள் கிடைக்க இப்படி விரதம் இருங்கள்.. மறந்தும் கூட தவறு செய்து விடாதீர்கள்மகா சிவராத்திரி தினத்துக்கு முதல் நாளோ அல்லது அதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்போ நாம் நம்மை மனதளவில் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் சென்னை: இன்றைய காலகட்டத்தில் மஹாசிவராத்திரி நாளில் அன்னதானம் கொடுப்பது புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் கொடுப்பதுண்டு. அன்னதானம் கொடுப்பது புண்ணியம் தான். ஆனால் மகாசிவராத்திரி தினத்தன்று கோயில், வீடு என எங்குமே அன்னதானம் என்ற பெயரில் எதையும் கொடுக்கக்கூடாது. நாடு முழுவதும் மகாசிவராத்திரி வரும் பிப்ரவரி 18ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி தினத்தில் எதை நாம் செய்யலாம், எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); விரதம் இருப்பது என்பது நம் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதற்காக நம் முன்னோர்கள் வகுத்துக் கொடுத்துச் சென்றுள்ள வழிமுறை ஆகும். இந்துக்களின் விரத தினங்களில் பல வகைகள்…

Read More

சிறுநீரகம் சார்ந்த உபாதைகளுடன் கூடிய சர்க்கரை நோயாளிகள் பலருக்கும் குமட்டல், பசியின்மை, சளித்தொல்லை போன்ற அறிகுறிகளில் நெல்பொறி சிறந்த உணவாகப் பயன்படும். நூற்றி ஐம்பது கிராம் நெல்பொறியில் சுக்கு, தனியா மற்றும் கண்டந்திப்பிலி ஆகியவற்றை வகைக்கு மூன்று முதல் ஐந்து கிராம் வரை சேர்த்து அரை விட்டர் தண்ணீரில் கலந்துக் காய்ச்சி, பாதியாக வற்றியதும் வடிகட்டி, சிறிது இந்துப்பு கலந்து, வெதுவெதுப்பாக, காலையில் சிறிது சிறிதாகப் பருகினால், குமட்டல் நின்று பசியும் நன்றாக எடுக்கும். சுக்கும் கண்டந்திப்பிலியும் சளியை நன்றாகக் கண்டிக்கும். உடல் லேசானதாகத் தோன்றும், சுறுசுறுப்புடன் செயலாற்ற உதவும். (adsbygoogle = window.adsbygoogle || []).push({}); சர்க்கரை மற்றும் சிறுநீரக உபாதை இல்லாமல் காய்ச்சலுடன் கூடிய குமட்டல், பசியின்மை, சளி உபாதை உள்ளவர்களுக்கு இதேபோல பயன்படுத்தி குணமடையலாம். தீவிரமான தண்ணீர் தாகத்தால் நிறையத் தண்ணீர் அருந்தினாலும், நீர்வேட்கை குறையாமல் கஷ்டப்படுவர்கள், நெல்பொறியில் சர்க்கரை கலந்து, தண்ணீர்விட்டுக் காய்ச்சி, பொறி நன்றாக…

Read More

மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்களை மீட்டெடுக்க சிறப்பு கவனம் செலுத்தவில்லை என ப.சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளார். கலந்துரையாடல் கூட்டம் தஞ்சை அருகே செங்கிப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று தஞ்சாவூர் தொழில் வர்த்தக சபை சார்பில் மத்திய பட்ஜெட் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு சபையின் தலைவர் மாறவர்மன் தலைமை தாங்கினார். செயலாளர் குகனேஸ்வரன், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய முன்னாள் துணைத்தலைவர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது:- உலக வர்த்தகம் சுருங்கி விட்டது உக்ரைன் போர் நடந்து வரும் இந்த நேரத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கநிலை குறித்து எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்சு போன்ற நாடுகளில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளின் வர்த்தகம் சுருங்கி…

Read More

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். இதனால்,…

Read More

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடர் முதலில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் களமிறங்கினர். இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். கவாஜா ஒரு ரன்னில் சிராஜின் வேகத்தில் ஆட்டமிழந்தார். வார்னர் ஷமியின் பந்திவீச்சில் போல்டாகி வெளியேறியேறினார். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலிய அணியை ஸ்மித்தும், லபுஷேனும் சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய லபுஷேன் 49 ரன்கள் , ஸ்மித் 37 ரன்கள் எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். பின்னர் மாட் ரென்ஷா ரன் எதுவும்…

Read More

தஞ்சை மாவட்டம் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி இலக்கை எட்ட வேண்டும் என்று கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தி உள்ளார். ஆசிரியர்களுக்கு சான்றிதழ் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்துகொண்டு சான்றிதழ்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- தஞ்சை மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திய 28 இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற செய்து நூற்றுக்கு நூறு தேர்ச்சி இலக்கினை அடைய செய்ய வேண்டும். பயிற்சி ஏடு எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும்…

Read More