India vs South Africa live updates: Rain played spoilsport in the series decider. The 5th T20I between India and South Africa in Bengaluru was called off due to rain. The five-match series ended level at 2-2. Stay updated with Times of India to get all the live cricket score updates, scorecard, and ball by ball commentary of 5th T20I match between India and South Africa
Author: Karthick
ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், வன்னிப்பட்டு, காவாரப்பட்டு, பேரையூர், கருவாக்குறிச்சி, சமயங்குடிக்காடு, குலமங்கலம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேலும் பொதுமக்கள் மின்தடை குறித்த விவரங்களுக்கு 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
DGE, Tamil Nadu has announced TN 12th result 2022 today, June 20, 2022. Students can check Tamil Nadu 10th result 2022 by registration number on the official website: www.tnresults.nic.in. www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge.tn.gov.in
தஞ்சையில் 24 பெருமாள்கள் கருடசேவை நேற்று 4 ராஜவீதிகளில் வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் கருட சேவை விழா தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோவில்களுள் தஞ்சை மாமணிக்கோவில்கள் மிக சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களுள் 3-வதாக விளங்கும் மேலசிங்க பெருமாள், நீலமேகப் பெருமாள், மணிக்குன்ன பெருமாள் கோவில்களில் கருடசேவை அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை, ராமானுஜதர்சன சபை சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. வைகாசி திருவோண நட்சத்திரம் ஆண்டுதோறும் வைகாசி திருவோண நட்சத்திரத்தில், தஞ்சையில் 24 பெருமாள் கோவில்களில் உள்ள உற்சவ பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி 88-வது ஆண்டாக இந்த ஆண்டு கருடசேவை நேற்று நடந்தது. முன்னதாக வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. 24 பெருமாள்கள் புறப்பாடு…
பொன்னியின் செல்வனின் முதல் பாகத்தின் டீசரை வெளியிடும் தேதியை படத்தின் தயாரிப்பாளர்கள் லாக் செய்துள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மணிரத்னம் படத்தின் டீஸர் ஜூலை 7 ஆம் தேதி தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. படத்தின் இயக்கம் மற்றும் தயாரிப்புக் குழுவினர் தஞ்சாவூர் காவல்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதியைப் பெற்றுள்ளனர். டீசர் வெளியீடு. இந்த நிகழ்வு கோவிலின் புல்வெளியில் முழு நடிகர்கள் மற்றும் குழுவினருடன் நடைபெற வாய்ப்புள்ளது வரும் நாட்களில் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டர்கள் மூலம் வெளியிடுவார்கள்.
India vs South Africa, 4th T20 Highlights: India crushed South Africa by 82 runs in the fourth T20I to draw the five-match series level 2-2 on Friday. India dished out a clinical performance as they posted a competitive 169 for six, riding on Dinesh Karthik’s career-best 27-ball 55 and Hardik Pandya’s 46 off 31 balls. The hosts then returned to dismiss South Africa for 87 in 16.5 overs. Brief Score: India: 169 for 6 in 20 overs (Dinesh Karthik 55, Hardik Pandya 46; Lungi Ngidi 2/20) South Africa: 87 all-out in 16.5 overs (Rassie van der Dussen 20, Avesh Khan 4/12).
நெதர்லாந்தில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய்-பிலிப் சால்ட் களமிறங்கினர். 1 ரன்னில் இருந்த ராய் ஸ்னேட்டர் பந்து வீச்சில் போல்ட் ஆனார். இதனையடுத்து பிலிப் சால்ட்-டேவில் மலான் ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் சர்வதேச போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பிலிப் 1 அரை சதம் மற்றும் 1 சதம் அடித்துள்ளார்.
குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மின்தடை அறிவிப்பு மின்சாரம் என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் மின்சாரத்தை அலட்சியமாகவோ, தவறுதலாகவோ பயன்படுத்தினால் பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும். ஆகையால், மிக பாதுகாப்பாக முன் எச்சரிக்கை உடன் பயன்படுத்த வேண்டும். இன்றைய சூழலில் மின்சாரம் இல்லாமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் மக்கள் அனைவரும் அதிகமாக மின்சாரத்தை பயன்படுத்தியதால் எந்த அளவுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும். திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட காக்களூர், காக்களூர் ஹவுசிங் போர்டு, பூண்டி, ஒதப்பை, காக்களூர் சிட்கோ, நரசிங்கபுரம், ஆஞ்சநேயபுரம், புல்லரம்பாக்கம், மெய்யூர், குஞ்சலம், பென்னலூர்பேட்டை, ஈக்காடு, செவ்வாப்பேட்டை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் சார்ந்த பணிகளை மேற்கொள்வதால் நாளை சனிக்கிழமை ஜூன் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் உடனடியாக அருகிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தொற்று பாதித்த நபர்களுக்கும், தொற்றிற்கான அறிகுறியுள்ள நபர்களுக்கும் மாநகராட்சியின் சார்பில் இலவசமாக பாரசிட்டமால் 500 மி.கி., வைட்டமின் சி 500 மி.கி. மற்றும் ஜிங்க் 50 மி.கி. ஆகிய மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இதற்காக ஒவ்வொரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற சமுதாய நல மையங்களில் தலா 500 மாத்திரை தொகுப்புகள் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.