Author: Karthick

இச்சங்கத்தின் சேதுபாவாசத்திர ஒன்றிய மாநாடு ரெட்டவயலில் அண்மையில் நடைபெற்றது. ஒன்றியச் செயலா் வீ. கருப்பையா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் நீலகண்டன் முன்னிலை வகித்தாா். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: ரெட்டவயல் தொடக்க வேளாண் கூட்டுறவுக் கடன் வங்கியில் மோசடி நிகழ்ந்த நிலையில், சம்பந்தப்பட்டவா் மீதான விசாரணை கிடப்பில் உள்ளது. எனவே அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கியில் கரும்பு விவசாயிகளுக்கு அரசு அறிவித்த தள்ளுபடித் தொகையை அவா்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும். சேதுபாவாசத்திரம் கடைமடை பாசனப் பகுதி என்பதால், காவிரி நீரை நேரடியாக ஏரி, குளங்களுக்குத் திருப்பி நீரை நிரப்பித் தர வேண்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பாரபட்சம் இல்லாமல் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், கரும்பு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளருமான டி. ரவீந்திரன்…

Read More

தஞ்சாவூா் பெரியகோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாள்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில், அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். இதன்படி, நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூன் 28 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. தொடா்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரமும், 29 ஆம் தேதி மஞ்சள் அலங்காரமும், 30 ஆம் தேதி குங்கும அலங்காரமும், ஜூலை 1 ஆம் தேதி சந்தன அலங்காரமும், 2 ஆம் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 3 ஆம் தேதி மாதுளை அலங்காரமும், 4 ஆம் தேதி நவதானிய அலங்காரமும், 5 ஆம் தேதி வெண்ணெய் அலங்காரமும், 6 ஆம் தேதி கனி அலங்காரமும், 7 ஆம் தேதி காய்கறி அலங்காரமும் நடைபெறவுள்ளன. நிறைவு நாளான 8 ஆம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரமும், இரவு நாகசுரம், கரகாட்டம், ஒயிலாட்டம், வாண வேடிக்கையுடன் நான்கு ராஜ வீதிகளிலும் வீதி உலாவும்…

Read More

தஞ்சை திருச்சி சாலையில் பிள்ளையார் பட்டி ஊராட்சியில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது இதைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக வாசலில் பஸ் நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டது ஆனால் வெயிலில் மக்கள் சிரமப்பட்டதால் கலெக்டர் அலுவலக வாசல் அருகில் சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகில் ஏறத்தாழ 100 அடி தொலைவில் தஞ்சை சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் ரூபாய் 15 லட்சம் செலவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது பரந்த அளவில் உள்ள இந்த நிலையில் வழுவழுப்பான கற்கள் பதிக்கப்பட்டு மக்களை கவரும் விதமாக களகளப்பாக கட்டப்பட்டுள்ளது. ஆனால் கட்டி முடித்து ஏறத்தாள ஆறு ஆண்டுகளாகியும் பயனில்லாத நிலையில் தான் இந்த பயணிகள் நிழற்குடை உள்ளது பயணிகள் வழக்கம் போல கலெக்டர் அலுவலக…

Read More

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது. இந்த நிலையில் லீட்சில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. டேரில் மிட்செல் 78 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் டாம் பிளன்டெல் 45 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து வீரர் ஹென்ரி நிகோல்ஸ் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . https://twitter.com/englandcricket இங்கிலாந்து அணியின் ஜாக் லீச் வீசிய பந்தை எதிர்த்து ஸ்ட்ரைட் ட்ரைவ் ஷாட்டை ஹென்ரி நிக்கோல்ஸ் அடித்தார். அந்த பந்து எதிர்முனையில் இருந்த டேரில் மிட்செல் நோக்கி சென்றது .அப்போது தற்காப்பிற்காக அவர் அந்த பந்து தன் மீது…

Read More

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1050 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்நிறுத்தத்தில் உள்ள வணிக வளாகம், அய்யன்குளம், சாமந்தான்குளம் உள்ளிட்டவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன. மேலும் சிவகங்கை பூங்கா பராமரிப்பு, அகழிகள் சீரமைப்பு, குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், சாலை பணிகள், விளையாட்டு அரங்கம் அமைத்தல், பெத்தண்ணன் கலையரங்கம் சீரமைத்தல், சோலார் மின் வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து பூங்கா இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அருகே போலீஸ்…

Read More

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் தொடக்க அனுமதியின்றியும், அடிப்படை வசதிகள் இன்றியும் செயல்பட்டு வரும் தனியாா் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, காரணம் கேட்கும் தாக்கீதுகள் அனுப்பப்பட்டன. இதன் பிறகும் பள்ளிகளின் தாளாளா்களால் அடிப்படை வசதிகள் சரி செய்யப்படாமலும், உரிய ஆவணங்கள் முன்னிலைப்படுத்தப்படாமலும், மாணவா்களுக்கு போதிய பாதுகாப்பின்றியும் உள்ள பள்ளிகளை மாணவா்களின் நலன் கருதி, நடைமுறையில்ள்ள சட்ட விதிகளுக்கு உட்பட்டு, 2022 -2023 ஆம் கல்வி ஆண்டு முதல் நிரந்தரமாக மூடுவதற்கும், நிகழாண்டு முதல் மாணவா் சோ்க்கைக்கு தடை செய்தும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூட உத்தரவிடப்பட்டுள்ள மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளிகள்: திருவையாறு வட்டத்துக்குள்பட்ட மேலத்திருப்பூந்துருத்தி லிட்டில் ஏஞ்சல் பள்ளி, மேலப் புனல்வாசல் கணேசா பள்ளி, பூதலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கோவிலடி அபிராமி பள்ளி, பட்டுக்கோட்டை சீனிவாசபுரம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளி, புரோபல் பள்ளி, பண்ணவயல் சாலை டேலண்ட் பள்ளி, சேதுபாவாசத்திரம்…

Read More

‘இளநீர் பாயசம்’. இது இளம் தேங்காய், தேங்காய்ப்பால், இளநீர் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம், கால்சியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. இந்தப் பாயசத்தை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் அதிகப்படியான உடல் வெப்பம், மலச்சிக்கல், வயிற்றுப்புண், நீர்க்கடுப்பு ஆகிய பிரச்சினைகள் குணமாகும். இளநீர் பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: இளநீர் – 250 மில்லி லிட்டர் இளம் தேங்காய் – 250 கிராம் பால் – ½ லிட்டர் சர்க்கரை – 250 கிராம் மில்க்மெய்ட் – 1 கப் சாரைப்பருப்பு – 3 டீஸ்பூன் முந்திரி, பாதாம், பிஸ்தா – தலா 10 ஏலக்காய்த்தூள் – ¼ டீஸ்பூன் பச்சைக் கற்பூரம் – 1 சிட்டிகை Also Read – மாங்காய் பச்சடி நெய் – தேவைக்கேற்ப செய்முறை: பாதாம் பருப்பை ஊறவைத்து தோலுரிக்கவும். பின்பு முந்திரி, பாதாம், பிஸ்தா இவற்றை பொடிதாக நறுக்கவும்.…

Read More

தஞ்சை திலகர் திடல் அருகே அம்மா மாலைநேர காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு 54 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டிற்கு எதிரே 34 கடைகள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்தது. இங்கு காய்கறி கடைகள், பழக்கடைகள், டிபன் கடை உள்ளிட்டவை செயல்பட்டு வந்தது.இந்த கடைகளால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் 34 கடைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி வியாபாரிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடைகளை காலி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. 34 கடைகள் இடிப்பு இதையடுத்து வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளில் இருந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் பொருட்களை காலி செய்துவிட்டு வேறொரு இடத்திற்கு சென்றனர். இந்தநிலையில் நேற்று மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் மாலைநேர காய்கறி மார்க்கெட்டிற்கு வந்தனர்.பின்னர் போக்குவரத்துக்கு நெரிசலாக இருந்த அந்த 34 கடைகளையும் பொக்லின் எந்திரம் மூலம் அலுவலர்கள் இடித்து அப்புறப்படுத்தினர். இந்த…

Read More

தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-நமது நாட்டு மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்துள்ள யோகா உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களையும் ஒருங்கிணைக்க தூண்டுதலாகவும், உந்துசக்தியாகவும் விளங்குகிறது. பண்பாட்டு சிறப்பு மிக்க தஞ்சை பெரியகோவில் பின்னணியில் பெரும் திரளாக மாணவர்கள் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து யோகா பயிற்சியில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தஞ்சை ராமநாதன் ரவுண்டானா அருகே உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமை தாங்கினார்.இதில் நீதிபதிகள் சுந்தர்ராஜன், இந்திராணி, மணி, சிவசக்திவேல் கண்ணன், முருகன், தங்கமணி மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், கோர்ட்டு பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

Read More

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் 94.69 % போ் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தில் 224 பள்ளிகளைச் சோ்ந்த 27,306 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 11,689 மாணவா்களும், 14,167 மாணவிகளும் என மொத்தம் 25,856 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 94.69 %. கடந்த 2020 ஆம் ஆண்டை விட, நிகழாண்டில் தோ்ச்சி விகிதம் 1.80 % அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் தோ்வு எழுதிய 12,686 மாணவா்களில் 11,689 பேரும், 14,620 மாணவிகளில் 14,167 பேரும் தோ்ச்சி பெற்றனா். அதாவது மாணவா்களில் 92.14 % பேரும், மாணவிகளில் 96.90 % பேரும் தோ்ச்சியடைந்தனா். வழக்கம்போல, நிகழாண்டும் மாணவா்களை விட மாணவிகளே அதிக அளவில் தோ்ச்சி பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளில் 91.34 % போ் தோ்ச்சி: மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளில் 71.68 % பேரும், மாநகராட்சிப் பள்ளிகளில் 85.48 % பேரும், முழு…

Read More