தஞ்சாவூர் பிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றதையும், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பிரதோஷ வழிபாடு.
Author: Karthick
இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசன் 16 மார்ச் 31 வெள்ளிக்கிழமை தொடங்கும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) உடன் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதும். 2022ல் குரூப்-ஸ்டேஜில் வெளியேறிய பிறகு இந்த சீசனில் சென்னை ஒரு நல்ல தொடக்கத்தைப் பெற ஆர்வமாக இருக்கும் அதே வேளையில், குஜராத் தனது பட்டத்துக்கான பாதுகாப்பை அதிக அளவில் தொடங்கும் என்பதால், இந்த போட்டி வாயில் நீர் பாய்ச்சுவதாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. GT vs CSK Match Details Gujarat Titans vs Chennai Super Kings, 1st Match, IPL 2023 Venue: Narendra Modi Stadium, Ahmedabad Date & Time: Friday, March 31, 7:30 PM IST Telecast & Streaming Details: Star Sports Network and JioCinema
தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்கு சென்று கொண்டிருந்த V.முருகையா என்கிற மினி பேருந்து தஞ்சை பாலாஜி நகர் டிவிஎஸ் ஷோரூம் அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் ஒரு பெண் உட்பட்ட இருவருக்கும் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். மேலும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், தஞ்சை மின்சார வாரியத்திற்கு சொந்தமான போஸ்ட் மரம் ஒன்று மினி பஸ் மோதியதில் நான்கு தூண்டாகி கீழே விழுந்து கிடக்கிறது. விபத்துக்கான காரணம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க. வில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. மீண்டும் பரபரப்பு கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சம் தொட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஐகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என அ.தி.மு.க.வில் பல பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. இதற்கிடையே அ.தி.மு.க. வில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந்தேதியும் (நேற்று), 19-ந் தேதியும் (இன்று) நடைபெறும்’ என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், பொதுச்செயலாளர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு…
இன்று காலை Jogging சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 300 மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் என் வேகத்தில் தான் ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது. அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது. நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே சென்றேன். சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 50 அடி இடைவெளி மட்டுமே இருந்தது. எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்! அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன். எனக்குள் ” அவரைக் கடந்து விட்டேன்”, என…
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான்.அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான். அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது. என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச்சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள்.என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது…அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான். மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்திருந்தான். அவனை பார்த்ததும்…
திருப்பதி: திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைக்கேடுகளை தடுக்க, வெப்கேம் பரிசோதனையுடன் கூடிய அதிநவீன முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையின் காரணமாக சாமானியர்கள் எளிதாக அறைகளை புக்கிங் செய்ய முடியும். ஒருவேளை யாராவது முறைகேடு செய்தால் முன்பணம் திரும்ப செலுத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பிரசித்த பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகிறார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்குவதற்காக 7 ஆயிரம் அறைகள் கொண்டு தங்கும் விடுதியை திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோடிக்கணக்கான பணத்தை தினமும் காணிக்கையாக கொட்டுகிறர்கள். அப்படி பக்தர்களால் கொடுக்கப்படும் பணம் மூலம் பக்தர்களுக்கு, தங்கும் விடுதி வசதி, அன்னதானம், கழிவறைகள், நிழற்கூடங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திருப்பதி திருமலையில் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பதி அறை வாடகைகுறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்குவதற்காக மிகக்குறைந்த விலையில் மிகத்தரமான…
இன்று மார்ச் 1ஆம் தேதி என்பதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1118.50 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் , வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் ரூ.1068.50 க்கு விற்பனை செய்யப்பட்டது
இந்த இரு குழந்தைகளும் யார் என்று தெரியவில்லை தற்பொழுது ஜெய்லானியா பள்ளிவாசலில் சுப்ரமணியபுரம் திருச்சி. இரு குழந்தைகளும் இருக்கிறார்கள் இவர்கள் பெற்றவர்கள் யார் என்று தெரியவில்லை தயவுசெய்து அவசர பதிவாக பகிரவும் பெற்றோர்கள் தெரியும் வரை பகிரவும்
மனிதனாய் பிறந்த அனைவருக்கும் கனவு வருவது இயல்பு. அது நல்லதாகவும் இருக்கலாம், கேட்டதாகவும் இருக்கலாம். நம்மில் பலருக்கு பாம்பு குறித்த கனவு வந்திருக்கும். ஆனால், அதற்கு அர்த்தம் என்ன என்பது பலருக்கு தெரிந்திருக்காது. ஜோதிடத்தின்படி, யாருக்கு ராகுதிசை ராகுபுக்தி நடைபெறுகிறதோ, அவர்களின் கனவில் பாம்பு வரும் என கூறப்படுகிறது. அதுமட்டும் அல்ல, பாம்பு பாலியல் குறியீடாகவும் கருதப்படுகிறது. அதே போல, ஆண்களுடனும் பாம்பு ஒப்பிடப்படுகிறது. அதாவது, ஒரு பாம்பு உங்கள் படுக்கையில் விழுவது போல கனவு கண்டால் அது பாலியல் சிற்றின்பத்தின் அடையாளமாக காணப்படுகிறது. நமக்கு பாம்பு குறித்த கனவு வந்தால், என்ன அர்த்தம் என்பதை இங்கே காணலாம். இயல்பாக நமது கனவில் பாம்பு வந்தால், நமது குலதெய்வ வழிபாடு விடுபட்டுள்ளதாக காலம் காலமாக கூறப்படுகிறது. அதாவது, குலதெய்வம் பாம்பு வடிவில் வந்து உங்கள… கனவில் பாம்பு உங்களை விரட்டினால் வறுமை ஏற்படப்போகிறது என்று அர்த்தம். எனவே, இதை சுலபமாக எடுக்க…