நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது இந்த பீரங்கி மேடு. இது தஞ்சாவூர் கொடிமரத்து மூளை மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பீரங்கியானது நாயக்க மன்னர் காலத்திலே உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 1,600 ஆம் ஆண்டுகளில் ஆண்ட ரகுநாத நாயக்க மன்னர் 1645 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே இந்த பீரங்கியை உருவாக்கியதாக கூறப்படுகிறது. பீரங்கி செய்யும் தொழில்நுட்பம்: இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது. பொதுவாக பீரங்கிகள் வார்ப்பிரும்பு பட்டைகளால் உருவாக்கப்படும். ஆனால் இந்த பீரங்கியோ தேனிரும்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தேன் இரும்பு என்பது பல்வேறு பகுதிகளை சிறிது சிறிதாக செய்து பின்பு ஒன்றோடொன்று ஒட்ட வைத்து மிக முக்கியமான இரும்பு பொருட்களை இணைக்கக்கூடிய உருக்கு உலை இணைப்பு தொழில்நுட்பம் மூலமாக செய்யப்பட்ட பீரங்கியாகும். அதனால் சுத்தமான எஃகினால் ஆன பீரங்கியாக காணப்படுகிறது. தனித்து காணப்படும் பீரங்கி: உலக…
Author: Karthick
தஞ்சை கீழவாசல் சரபோஜி சந்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சை கீழவாசல் சந்தையில் சுமார் 308 கடைகள் கட்டப்பட்டு பொது பயன்பாட்டுக்கு திறந்து விட பட்டுள்ளது. சரபோஜி சந்தை என பெயரிடப்பட்டு கீழவாசல் சந்தை வளாகமே ஒரு புது பொலிவுடன் காணப்படுகிறது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில்தான் தஞ்சையின் மொத்த மளிகை பொருட்கள், எண்ணெய், நாட்டு மருந்துகள், காய்கறி, பூக்கள் உள்ளிட்ட அனைத்துவகை பொருட்களின் வணிகம் மொத்தமாகவும், சில்லரையாகவும் ஏகபோகமாக நடைபெறும். மழைக்காலங்களில் சந்தை சேறும் சகதியாய் மட்டுமல்ல வாகன போக்குவரத்து நெரிசலான பகுதியாகவும் காணப்படும். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ் நீண்ட நெடிய பார்க்கிங் வசதி கடைகளை சுற்றிலும் அமைக்கப்பட்டு வணிக வளாகம் மிகவும் சுகாதாரமாகவும் விசாலமான இடவசதியுடனும் காணப்படுகிறது. இதில் ஏறத்தாழ 35 கடைகள் ஜூன் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டு, வணிகம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் நாளை (ஜூலை 1)மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மின்தடை பகுதிகள்: தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. தற்போது பல இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மின்சார பழுதுகள் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் அதை சரி செய்ய நோக்கில் அடிக்கடி மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மாதந்தோறும் மின்சார பணிகளுக்காக குறிப்பிட்ட நாளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிடும். அந்த வகையில் நாளை (ஜூலை 1) புதுப்பட்டி மற்றும் கந்தர்வக்கோட்டை துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றிகள்…
தென்னாப்பிரிக்க டி20 அணியின் புதிய கேப்டனாக டேவிட் மில்லர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்து, அயர்லாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்தில் 3 ஒருநாள், 3 டி20, 3 டெஸ்டுகளிலும் அயர்லாந்தில் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக தெ.ஆ. வெள்ளைப் பந்து அணியின் கேப்டன் பவுமா, இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் இடம்பெறவில்லை. இதனால் தெ.ஆ. ஒருநாள் அணிக்கு கேஷவ் மஹாராஜும் டி20 அணிக்கு டேவிட் மில்லரும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பவுமாவால் எட்டு வாரங்களுக்குப் பிறகே விளையாட முடியும் எனத் தெரிகிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 19 அன்று தொடங்குகிறது.
தமிழ்த் திரைப்பட நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று (ஜூன் 29) காலமானர். அவர் நுரையீரல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன. அண்மையில் அவர் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவர் நிலை மோசமானதாகக் கூறப்பட்டது. மீனா தொழிலதிபர் வித்யாசாகரை 2009ஆம் ஆண்டு மணமுடித்தார். அவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கான அணிக்குத் திரும்பியுள்ளார், இவரோடு சாம் பில்லிங்ஸும் அணிக்குத் திரும்பியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 3-0 ஒயிட் வாஷ் கொடுத்த இங்கிலாந்து, விராட் கோலி 2-1 என்று வென்று பாதியிலேயே வந்த இங்கிலாந்து அல்ல, இது வேறு இங்கிலாந்து என்பதை இந்த டெஸ்ட்டை ஆடும்போது உணர்வார். மேலும் அப்போது ஐபிஎல் தொடருக்காக 5வது டெஸ்ட்டிலிருந்து இந்திய அணி கோவிட்டைக் காரணம் காட்டி வந்தது. இப்போது கோலி நிச்சயம் உணர்வார், அப்போதே ஆடியிருந்தால் 3-1 என்று பெரிய அளவில் வென்று இங்கிலாந்தில் கொடிநாட்டிய கேப்டனாகியிருக்கலாமே, நம் கேப்டன்சி காலமும் இன்னும் கொஞ்சம் நீடித்திருக்குமே என்று நிச்சயம் நினைப்பார். இப்போது இந்திய அணியின் மனநிலையும் வெற்றி மன நிலையில் இல்லை, தோற்றால் என்ன தொடர் 2-2 என்று ட்ரா ஆகும் அவ்வளவுதானே என்ற மனநிலைக்கு வந்து விட்டனர்,…
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூன் 27-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, வடக்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஜூன் 28-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
குறுவை தொகுப்பு திட்டம் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு நடப்பு குறுவை பருவத்தில் சாகுபடி பரப்பினை அதிகப்படுத்தவும், நடப்பு தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரவும், பல்வகை பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும், பரிந்துரைக்கப்பட்ட உயர் விளைச்சல் நவீன தொழில் நுட்பங்களை கொண்டு நெல் உற்பத்தி திறனை அதிகப்படுத்திடவும், டெல்டா விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் குறுவை தொகுப்பு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு ரூ.16 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நெல் சாகுபடியை ஊக்குவித்திட 50 சதவீதம் மானியத்தில் சான்று பெற்ற நெல் விதைகள் மற்றும் 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள் மற்றும் மானியத்தில் மாற்றுப்பயிர் சாகுபடிக்கு இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளன. உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு பயனாளிக்கு ஒரு ஏக்கருக்கு மட்டும் ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. மற்றும் ½…
தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில் 13 ஆயிரத்து 909 மாணவர்களும், 14 ஆயிரத்து 832 மாணவிகளும் என மொத்தம் 28 ஆயிரத்து 741 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 11 ஆயிரத்து 808 மாணவர்களும், 14 ஆயிரத்து 105 மாணவிகளும் என மொத்தம் 25 ஆயிரத்து 913 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் 84.89 சதவீதமும், மாணவிகள் 95.10 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டம் 90.16 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அரசு பள்ளிகள் இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகள் 57.48 சதவீதமும், மாநகராட்சி பள்ளிகள் 81.36 சதவீதமும், அரசு உதவிபெறும் பள்ளிகள் 87.94 சதவீதமும், அரசு பள்ளிகள் 84.18 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. பகுதி அரசு உதவி…
தஞ்சாவூா் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் கீழ்தளத்திலுள்ள கூட்டரங்கில் விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் ஜூலை 1 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்திருப்பது: இக்கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்குத் திட்ட விளக்கம் அளிக்கப்படவுள்ளது. மேலும் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம், தோட்டக்கலைத் துறை போன்ற விவசாயம் தொடா்புடைய கருத்துகளை மட்டும் தெரிவிக்கலாம். கருத்துகளைத் தெரிவிக்க விரும்புபவா்கள் தங்களது பெயா், ஊா், வட்டாரத்தை ஜூலை 1-ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை கணினியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து ஒப்புதல் பெற்று, பின்னா் மனுக்களை அளிக்க வேண்டும்.