தஞ்சை மாநகராட்சியை பொருத்தவரை வசதி படைத்தவர்கள் வாழும் பகுதி மென் மேலும் அலங்கரிக்கபடுகிறது.. நடுத்தர மக்கள் வாழும் பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வருகிறது.. வசதி படைத்தவர்கள் வாழும் பகுதிகளின் சாலை ஓரங்களை மெருகூட்டுவதற்கு செலுத்தும் அக்கறையில் சிறு துளியை கூட மற்ற பகுதிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் செலுத்துவதில்லை.. தஞ்சை பர்மாகாலனி மாரிகுளம் சுடுகாட்டை ஓட்டிய சாலையில் உள்ள பாதாள சாக்கடை எப்போதும் சாலை மற்றும் அருகிலுள்ள மழை நீர் வடிகாலில் வழிந்தோடுகிறது. இந்த சாலையை கடந்து செல்லும் போதே துர்நாற்றத்தால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. அதன் அருகில் வசிப்பவர்களின் நிலையை சொல்லவே தேவையில்லை. இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி சார்பில் இதுவரை எந்த முயற்சியும் இல்லை. தஞ்சை மாநகராட்சி முழுவதும் பாதாள சாக்கடை இணைப்பு உள்ளது.. மற்ற பகுதிகளில் இது போல் அலட்சியம் காட்டபடுவதில்லை.. மேலும் தஞ்சை பூக்கார தெரு சுப்ரமணியர் சுவாமி கோவில்…
Author: Karthick
68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் “சூரரைப் போற்று” திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, பின்னணி இசை, திரைப்படம், திரைக்கதை உள்ளிட்ட 5 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த தமிழ் படமாக வசந்த் இயக்கிய “சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும்” தேர்வு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் தமிழ் படங்கள் மட்டும் 10 விருதுகளை வென்றுள்ளன. 2020 ஆம் ஆண்டில், கோவிட் 19 தொற்று காரணமாக பல மாதங்கள் திரையரங்குகளை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வழக்கத்தை விட குறைவான படங்கள் வெளியாகின. அவற்றுடன் புதிய திரைப்படங்களும் நேரடியாக OTT தளங்களில் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில், 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய திரைப்பட விருதுகளை புதுதில்லியில் அறிவித்தனர். சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் ஓடிடி தளத்தில் வெளியான படம் “சூரரைப் போற்று”. ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கதாநாயகியாக அபர்ணா…
ஒருநாள் போட்டியில் இறுதியாக இங்கிலாந்து அணியில் நாளை நடைபெற உள்ள போட்டியில் விளையாட போகிறேன் “அதன்பின்னர் நான் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஆலோசனைக்கு பிறகு தான் இந்த கஷ்டமான முடிவுகளை எடுக்க முடிந்தது. சக வீரர்களுடன் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக தான் இருந்தேன். என்னால் இந்த ஒருநாள் போட்டிகளில் 100 சதவீதம் விளையாட முடியவில்லை.” “என்னால் அனைத்து விதமான போட்டிகளிலும் விளையாட முடியவில்லை. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது, அது என்னால் முடியாது. அதுமட்டுமின்றி, நான் அணியில் இருக்கும்போது ஜோஸ் பட்லர் மற்றும் மற்ற வீரர்களுடைய இடத்தை நான் கைப்பற்றியது போல தோன்றுகிறது.” “நான் ஓய்வு பெற்ற பிறகு, அடுத்த வீரருக்கு சரியான நேரம் அமைந்தால் நான் கடந்த 11 ஆண்டுகள் என்ன செய்தேனோ, அதனை அவரும் செய்வார்.இந்த முடிவுக்கு பிறகு என்னால் 100 சதவிதம் டெஸ்ட் மற்றும்…
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பலர் முறைகேடு செய்து வருகின்றனர். அத்துடன் நீதிமன்றத்தில் அரசு ஊழியரின் மீது உள்ள வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. அதனால் அரசு ஊழியர்களின் மீது துறை வாரியாக கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கவனத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலும் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் முறைகேடு செய்கின்றனர். இதனை தொடர்ந்து அரசு ஊழியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட பல வழக்குகள் தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இதையடுத்து தற்போது அரசு ஊழியர்கள் மீது துறை வாரியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும் துறை ரீதியாக நடவடிக்கை…
அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில், தனுஷ் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் ‘தி கிரே மேன்’. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 2009-ல் வெளியான ‘தி கிரே மேன்’ என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரயன் காஸ்லிங் நடிகர் தனுஷை வெகுவாக பாராட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய ரயன் காஸ்லிங், தனுஷ் ஒரு சிறந்த நடிகர். தி கிரே மேன் படத்தின் சண்டைக் காட்சிகளை படமாக்கிய போது தனுஷ் எந்த விதமான தவறும் செய்யவில்லை. எத்தனை முறை டேக் எடுத்தாலும் தனுஷ் மட்டும் தவறுகள் ஏதும் செய்யாமல் சரியாக செய்தார். தனுஷை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவரை எதிரியாக நினைத்து நடிப்பது…
சென்னை: புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவும் 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவரவவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது. தமிழகத்தில் 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவேரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறையானது தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. மேலும் ஏற்கெனவே சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதி பெற்று செயல்படாமல் இருந்த குவாரிகளையும் திறப்பதற்கான பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையை மனித சக்தியைப் பயன்படுத்தி மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றும் லாரி உள்ளிட்ட…
தஞ்சை பெரிய கோவிலின் தென்புற கோஷ்டத்தில் ஆடவல்லானின் அழகிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி ஆனந்த நடனமாடுவதை தத்ரூபமாகக் காட்டும் அழகிய சிற்பம் இது. ஆடவல்லானின் இருபுறமும் மேலே யாழை மீட்டும் தேவர்களும், கீழே ஒருபுறம் ஒருவர் குடமுழா இசைக்க மறுபுறம் காரைக்காலம்மையார் கைத்தாளமிசைக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள சிற்பத் தொகுதி இது. ஆடவல்லானின் தூக்கிய இடக்காலுக்கும் இடது கரத்துக்கும் இடையில் உடலை முறுக்கிய நிலையில் பாம்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. விரிசடையும், இடை ஆடையும் காற்றில் விரிந்து பறப்பது போன்று அமைத்திருப்பது காண்கையில் சோழச் சிற்பிகளின் தனித்துவமான சிற்பத்திறன் விளங்கும். மற்றொரு சிறப்பாக கோவிலுக்கு நிவந்தமாக வழங்கப்பட்ட பொன்னாலான பொருட்கள், வெள்ளி பொருட்கள், செப்புக்குடங்கள் என அனைத்து அளவைகளுமே ஆடவல்லான் பெயரில் தான் அழைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேட்டூரில் உபரி நீர் திறக்கப்படுகிறது.வழக்கம் போல் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் பாய்ந்தோடி கடலில் கரைந்தும்..கலந்தும் போகும்! ஆனால்,மக்களின் கோரிக்கையோ உப்பு நீராய் கரைந்து போகும்! நீர் நிலைகளை சரியாக வைத்திருக்கும் அரசு என்கிற பெயரை எந்த அரசும் தக்க வைத்துக் கொள்ளப் போவதில்லை என்பதே நிதர்சன உண்மையாக இருக்கிறது ! ஏரி குளங்கள் ஏன் இன்னும் நிரம்பவில்லை ? இனியாவது நிரம்புமா?.! காவிரி கரையோரம் தஞ்சையில் புது ஆற்று ஓரம் 15 கிலோமீட்டர் தூரம் தென் பகுதியில் உள்ள குருங்குளம் மேல்பாதி ,கீழ்பாதி மற்றும் திருக்கானூர்ப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காவிரி குடிநீர் இதுவரை கிடைக்கவில்லையே இது நிர்வாக தோல்விதானே?! இதுவரை எந்த அரசும் கண்டுகொள்ளாத ஒரு துர்பாக்கியம் இன்றளவும் தொடர்கிறது. ஒவ்வொரு தடவையும் மேட்டூர் அணை 120 அடியை எட்டும் போதும் பாவப்பட்ட மக்களுக்கு காவிரி தண்ணீரை குடிப்பது எப்போது என்கிற கேள்வி எழுந்து கொண்டேதான் இருக்கிறது! வறட்சியான தஞ்சையின்…
எந்த நேரத்திலும் காவல் உதவி கிடைக்க அனைவரும் “காவல் உதவி” செயலியை பதிவிறக்கம் செய்யவும்.. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து காலத்தில் உதவும் நண்பன் “காவல் உதவி செயலி” Kaaval Uthavi
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் : மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் ஆட்சியில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிவன் கோயில்களில் ஒன்றாகும். மீனாட்சி-சுந்தரேஷ்வர் கோயில் என்றும் அழைக்கப்படும் இது, பார்வதி தேவியை மீனாட்சியாகவும், அவரது மனைவி சிவபெருமானை சுந்தரேஸ்வராகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் பொற்கோயில் : ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் அல்லது ஸ்ரீபுரம் பொற்கோவில், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இந்த கோயில் முற்றிலும் தூய தங்கத்தால் கட்டப்பட்டது, இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பொற்கோயில் ஆகும். பால முருகன் கோவில் : தமிழ்நாட்டில் பல புகழ்பெற்ற முருகன் கோயில்கள் உள்ளன, அவற்றில் ஒன்று சிறுவாபுரியில் உள்ள பால முருகன் கோயிலாகும்.500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பிரசித்தி பெற்றது நவபாஷாணம் கோவில் : தமிழ்நாட்டில் உள்ள நவக்கிரக கோயில்கள் ஒன்பது கோயில்களின் தொகுப்பாகும், அவை ஒவ்வொன்றும் ஒன்பது கிரக தெய்வங்களில் ஒன்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.…