மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் 2022 க்காக சென்னையின் நேப்பியர் பாலம் கருப்பு மற்றும் வெள்ளை கட்டங்களில் வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதனால், கருப்பு வெள்ளை நேப்பியர் பாலம் சென்னையின் கவர்ச்சியாக மாறியுள்ளது. பலர் செல்ஃபி மற்றும் வீடியோ எடுக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல செஸ் வீரர் பிரக்ஞானந்தா குடும்பத்துடன் நேப்பியர் பாலம் பகுதிக்கு சென்று புகைப்படம் எடுத்தார். இந்தத் தகவலை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலியும் ஒரு செஸ் வீராங்கனை. ஒலிம்பியாட் போட்டியிலும் பங்கேற்கிறார். இந்த ஆண்டு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பிரக்னாநந்தா, உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்துள்ளார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான இந்தியாவின் பி அணியில் பிரக்ஞானந்தா சேர்க்கப்பட்டுள்ளார்
Author: Karthick
மும்மூர்த்தி விநாயகர் திருக்கோவில் அகற்றப்பட உள்ளது* தஞ்சாவூர் மகர் நோன்புச்சாவடி சிவ ராயர் தோட்டம் 1 ம் தெருவில் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து தங்கள் குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்த மும்மூர்த்தி விநாயகர் திருக்கோயில் 27.7.2022 இன்று பாலாலயம் செய்யப்பட்டு சிலைகள் அகற்றப்பட உள்ளன *தஞ்சை மாநகராட்சி அறிவுறுத்தலின் படி ரோடு விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் இத் திருக்கோவிலை அகற்றப்பட உள்ளது.* என்பது பொதுமக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திருக்கோவிலின் *மும்மூர்த்தி விநாயகர் பெருமான் கனக துர்க்கை நவகிரகங்கள்* சிலைகள் அனைத்தும் கிருஷ்ணன் கோவில் 4 ம் தெருவில் *ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோவிலில்* வைக்கப்பட உள்ளது. வழிபாட்டுக்கு அல்ல மீண்டும் சிவராயர் தோட்டம் ஒன்றாம் தெருவாசிகள் ஒரு இடத்தை தேர்வு செய்து மீண்டும் திருக்கோவிலை எழுப்பி அந்த சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்ய உள்ளதாக அறிகிறோம். ஆகையால் பொதுமக்கள் கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம்.நன்றி
இந்த ஆண்டின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அறிவிப்பை வெளியாகியுள்ளது. அதன்படி ஏ.ஆர் ரஹ்மான் இசையில் முதல் பாடலுக்கான சிறிய ப்ரோமா விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அத்துடன் முதல் பாடல் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=2Mv1e_MhTCM
தஞ்சாவூர் அருள்மிகு நீசும்பசுதனி வடபத்ரகாளியம்மனுக்கு ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம்
இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். சிலிண்டர் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எல்பிஜி மானியம் 2023 இல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மானியம் குறித்த தகவல்: இந்தியாவில் கிராமங்கள்தோறும் ஏழை மக்கள் அனைவரும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய பாஜக அரசு உஜ்வாலா எனும் திட்டத்தை துவங்கியது.2020ம் ஆண்டுக்குள் 8 கோடி பேருக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த நிதியாண்டில் இத்திட்டத்தின் 2.0 தொடங்கப்பட்டது. இதன் மூலம் சிலிண்டர், அடுப்பு ஆகியவை ஒரு கோடி பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டது. தற்போது வரை பிரதமரின் சிலிண்டர் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு முதல் ஒரு வருடமாக சிலிண்டர் விலையானது தொடர்ந்து அதிகரித்து…
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் உடனே காலி செய்ய இந்து சமய அறநிலைய துறை மற்றும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் உத்தரவு
கொரோனா வருகையால், அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சென்ற ஆண்டின் மத்தியில் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், அடுத்த அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வர வாய்ப்புள்ளது. அகவிலைப்படி (DA) 4% உயர்வு; அடுத்த மாதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம். அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது, அதே நேரத்தில் அகவிலை நிவாரணம் (DR) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது.அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI) அடிப்படையில் வழக்கமாக ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசு திருத்தி அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஜனவரியில், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி அரசு அறிவித்தது. அதாவது ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்கள்…
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ திட்டத்தை மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். இதனால் பல லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்களை பற்றி இந்த பதிவில் காண்போம். மருத்துவ திட்டம்: இந்தியாவில் மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டு அரசுகளும் சிறப்பாக இயங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். இத்தைகைய அரசு ஊழியர்களுக்கு அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற பயனுள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு என்று குறிப்பிட்ட தொகையினை நிர்ணயம் செய்து அதற்குள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் வரையறையை பின்பற்றி வருகிறது. இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை…
போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு இது ஒரு பதட்டமான வெற்றியாகும். இந்தியா 309 ரன்கள் இலக்கை நிர்ணயித்த பிறகு, முகமது சிராஜ் வீசிய கடைசி ஓவரில் புரவலர்களுக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முதல் ஐந்து பந்துகளில் 10 ரன்கள் கொடுத்தார். கடைசி பந்தில் சமன்பாடு எளிமையாக இருந்தது – ஐந்து வெற்றி அல்லது நான்கு போட்டியை சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல வேண்டும். இறுதிப் பந்தில், சிராஜ் யார்க்கரை அடிக்க முயன்றார், ரோமாரியோ ஷெப்பர்ட் வேலைநிறுத்தத்தில் இருந்தார். அது பேட்டரைக் கடந்து லெக் ஸ்டம்பை நோக்கிச் சென்றது, ஆனால் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் ஒரு பவுண்டரியை நிறுத்தி இந்தியாவை வெற்றிபெற அழைத்துச் சென்றார். @BCCI 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஒரு அற்புதமான இறுதி ஓவர், @mdsirajofficial மூலம் எஃகு நரம்புகள்! இந்தத் தொடருக்கு…
தமிழ் மாதங்களில் ஆடி என்பது ஆன்மிக சிறப்பு மிகுந்த பக்தி மாதம். ஆடி மாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு என ஆடி மாதமே கோலாகலமாக இருக்கும். ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்று அழைப்பார்கள்.ஆடிமாதம் முழுவதுமே அம்மன்களுக்கு உகந்த மாதம் ஆகும். அதுவும் குறிப்பாக ஆடிமாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாளாகவும், ராகு காலத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட்டால், நினைத்த காரியம் கைகூடும், மாங்கல்ய தோஷம் நீங்கும், திருமண தடைகள் விலகும், ஆயுள் விருத்தியாகும் என்பதால் பெண்கள் பல கோவில்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு விளக்கேற்றி அம்பாளை தரிசனம் செய்வது வழக்கம்.