வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்னில் மடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும். தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இந்த ஆட்டம்…
Author: Karthick
தஞ்சை மாநகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் ரூ.10 கோடியில் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. தஞ்சை மாநகராட்சி தஞ்சை நகராட்சி, மாநகராட்சியாக கடந்த 2014-ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.1050 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பஸ் நிலையம், மார்க்கெட், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டுள்ளன. மேலும் குடிநீர் அபிவிருத்தி பணிகள், சோலார் விளக்குகள் போன்றவையும் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள பூங்கா சீரமைக்கப்பட்டும், புதிதாக பூங்கா அமைக்கப்பட்டும் வருகிறது. 1,400 கண்காணிப்பு கேமரா இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி தஞ்சை மாநகரம் முழுவதும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. இந்த கேமராக்கள் தஞ்சை…
திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலைய பகுதியில் இருந்து மின் வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமானேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம் பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுகக்குடி, வரகூர், கண்டமங்கலம் விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகாராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, கடம்பங்குடி, நடுக்காவேரி, உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் சாலியமங்கலம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் நல்லையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பூண்டிமற்றும் ராகவம்பாள் புரம் துணை மின்நிலையத்தில் வருகிற 2- ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பூண்டி, சாலியமங்கலம், திருபுவனம், மலையர்நத்தம், குடிகாடு, செண்பகபுரம், பள்ளியூர், களஞ்சேரி, இரும்புதலை, ரெங்கநாதபுரம், சூழியக்கோட்டை, கம்பர்நத்தம், அருந்தவப்புரம், வாளமர்கோட்டை,…
தஞ்சாவூர் தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக 36 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து மழையால் நெல் மற்றும் உளுந்து அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திடீர் மழை தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் மழை பெய்தது. இந்த மழையில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி காணப்பட்டது. இதே போல் அறுவடைக்கு தயாரான உளுந்து பயிர்களும் பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக மழை இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் மதியத்துக்குப்பிறகு வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழையாக கொட்டியது. அரைமணி நேரம் இந்த மழை நீடித்தது. அறுவடை பணிகள் பாதிப்பு இந்த மழை…
மணிரத்னம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படம். சோழர்களின் வரலாற்றை சில கற்பனை கதாபாத்திரங்களுடன் இணைத்து அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று பலரும் முயற்சித்தனர். 5 பாகங்களாக வெளிவந்த அந்த நாவலை படமாக்குவது என்பது சாதாரண காரியம் அல்ல. எம்ஜிஆர் கூட இந்த முயற்சியில் இறங்கி, பின்னர் அது தோல்வியில் முடிந்து, படத்தை பாதியிலேயே கைவிட்டார். தற்போது இந்த படத்தை மணிரத்தினம் எடுத்து சாதித்து காட்டியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகி உள்ளது இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே ஜூலை 8 அன்று படத்தின் டீசர் வெளியாகி இருந்தது. இன்று வரை 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரம்,…
“Go into all the world and preach the gospel …” Jesus said. He gave authority to his apostles to preach the gospel, to heal the sick, and to cast out demons. These Powers his prayer is pure heart, faith received millions arputar St. Antony less listeners, and nampikkaiyotu requests by his intercession to God interceding “Holy earth spread around the disciples of Jesus in the way iraittutaray land in the avatarittu boon integral vallalam our retreats million arputarana patuvai St. Antony nature’s beauty tennaimarankal surrounded by green fields in the middle Skyscrapers stand tall Thanjavur District St. Anthony’s Correction on the way…
சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் மதிப்புமிக்க நிகழ்வு தாயகம் திரும்பியுள்ளதாக கூறினார். முதல் முறையாக இந்தியா நடத்தும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு என்று வழங்கப்படும் ஓய்வூதிய திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. நீதிமன்ற உத்தரவு: திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் ஆரணியில் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் 1975 ஆம் ஆண்டு தனது முதல் மனைவி உயிரோடு இருந்த போது அவருடைய தங்கையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இது அவருடைய முதல் மனைவிக்கு பிடிக்காமல் இருந்துள்ளது. இந்நிலையில் அவர் பணி ஓய்வு பெற்று அவருக்கு பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தனுஷ்கோடி கடந்த 2010 ஆம் ஆண்டு மரணமடைந்தார். அதனால் அவருடைய பென்சன் வாங்குவது குறித்து பிரச்சனை எழுந்தது. அதன் பின் தனக்கு பென்சன் வழங்க வேண்டும் என சொல்லி தனுஷ்கோடியின் 2வது மனைவி சாந்தி விண்ணப்பித்தார். ஆனால் அக்கவுண்டன்ட் ஜெனரல் நிராகரித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து…
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழுவினர் தற்போது ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடலை பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னியின் நதி’ பாடல் வருகிற 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரையும் பகிர்ந்துள்ளார்கள். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை, தமிழ்நாடு செய்தி நேரலை புதுப்பிப்புகள் இன்று: உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் தொடங்கி வைக்கிறார். மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி கிராமத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெற உள்ளது. தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் மாமல்லபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பூஞ்சேரி ஆகிய இடங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு, அதற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதன் அருகே மாமல்லபுரம் நுழைவு வாயிலில் அரசுக்கு சொந்தமான பூம்புகார் (தமிழ்நாடு கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகம்) கைவினைஞர்களால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார். மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து 22,000 பணியாளர்களை ஈடுபடுத்தியுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்…