Author: Karthick

CWG 2022 இந்தியா பெண்கள் vs ஆஸ்திரேலியா பெண்கள் இறுதிப் போட்டியின் சிறப்பம்சங்கள்: இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 65 ரன்களில் தைரியமாக ஆட்டமிழந்தார், ஆனால் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடக்க காமன்வெல்த் விளையாட்டு கிரிக்கெட் தங்கப் பதக்கத்தை வென்றதால், இந்தியாவை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. மொத்தம் 0f 162 ரன்களை சேஸ் செய்த இந்தியா, ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மாவை மலிவாக இழந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு ஹர்மன்ப்ரீத் ஜெமிமா ரோட்ரிகஸுடன் 96 ரன்கள் சேர்த்தார். பிந்தையவர் 33 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். ஹர்மன்ப்ரீத் மற்றும் பூஜா வஸ்த்ரகர் ஆஷ்லே கார்ட்னரால் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர், இதனால் ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் வந்தது. அதன்பிறகு, இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து, 19.3 ஓவர்களில் 152 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னதாக, பெத் மூனி 41 பந்தில் 61 ரன்கள் எடுத்ததால் ஆஸ்திரேலியா 20…

Read More

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சையை அடுத்த சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் நல்லையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் வருகிற 10-ந் தேதி பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், ஞானம்நகர், சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லிதோப்பு, காந்தாவனம், குளிச்சப்பட்டு, அன்னை இந்திராநகர், பணங்காடு, எடவாக்குடி, யாகப்பாசாவடி, அம்மாகுளம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேலும் மின்தடை தொடர்பான தகவல்களுக்கு 1912 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read More

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி, 2-வது தவணை தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 39 லட்சத்து 56 ஆயிரத்து 577 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அரசு தடுப்பூசி மையங்களில் சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 1,700 முகாம்கள் இதுவரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் உரிய கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை துணை இயக்குனர்…

Read More

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. இதனால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்யப்படுவதில்லை. மாரியம்மன்கோவில் கிராமமக்கள் சார்பில் ஆண்டுதோறும் புஷ்பாபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான புஷ்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. கிராமமக்கள் பூக்கூடைகள், பூத்தட்டுகளை எடுத்து கொண்டு சிவன்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். பின்னர் மகாமாரியம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், நித்திய வழிபாட்டுக்குழு செயலாளர் சாவித்திரி மகாலிங்கம், சிவராத்திரி கமிட்டி தலைவர் சரவணவேல், புஷ்பாபிஷேக பெருவிழா விழாக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், வேணு.கண்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Read More

தஞ்சாவூர் கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை அடைந்து அங்கிருந்து தஞ்சை மாவட்டம் கல்லணையை வந்தடைகிறது. அந்த தண்ணீர் கல்லணையில் இருந்து காவிரி மற்றும் வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றில் உள்ள மணற்போக்கி 5 ஷட்டர்கள் உள்பட 35 ஷட்டர்களில் இருந்தும் தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் கொள்ளிடம் ஆற்றில் நேற்று மாலை நிலவரப்படி கல்லணையில் இருந்து 41 ஆயிரத்து 240 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வெளியேறி வருகிறது. நேற்று முன்தினம் 50ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் நேற்று தண்ணீர் திறக்கப்படும் அளவு சற்று குறைந்தது. சுற்றுலா பயணிகள் இதேபோல, கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 8,004 கன அடி, வெண்ணாற்றில் 8007 கன அடி, கல்லணை கால்வாயில் 2,608 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. கல்லணை கொள்ளிடம் ஆற்றில்…

Read More

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைகிறது. கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், கொள்ளிடம் மற்றும் காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்தநிலையில் உபரி தண்ணீர் அணைக்கரை கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளதால் அணைக்கரை வீராகண் ஊராட்சி வாண்டையார் இருப்பு பகுதியில் கொள்ளிடம் கரையோரம் உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நீர்வளத்துறையின் சார்பில் மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மீட்பு மேலும், அணைக்கரை விநாயகன் தெரு கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமான தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் மீட்கப்பட்டு அவர்கள் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள்…

Read More

அண்டை மாநிலமான கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் பன்றி காய்ச்சல் பரவுவதை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டு தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணைஇயக்குனர் டாக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் உதவி இயக்குனர்கள் பழனிவேல் (நோய் புலனாய்வு பிரிவு), சையதுஅலி, கால்நடை உதவி மருத்துவர் செரீப் ஆகியோர் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட பகுதிகளில் பன்றிகள் வளர்க்கும் இடத்திற்கு சென்று பன்றிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? நோய் அறிகுறிகள் எதுவும் தென்படுகின்றனவா? என ஆய்வு மேற்கொண்டனர். பன்றி காய்ச்சல் பரவும் விதம், அதனை தடுக்கும் முறைகள் குறித்தும் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.

Read More

தஞ்சாவூர் மேட்டூர் அணையில் இருந்து அதிகபட்சமாக தண்ணீரை திறந்து விடப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணையை வந்து சேருவதற்கு முன்னதாக திருவளர்ச்சோலை அருகே உள்ள தரைப்பாலத்தில் காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழிந்து ஓடி கொள்ளிடத்தில் கலக்கிறது. திருவளர்ச்சோலை தொடங்கி கிளிக்கூடு கிராமம் வரை ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீர் வழிந்தோடி வருவதால் நேற்று 2-வது நாளாக திருவானைக்காவல், திருவளர்ச்சோலை வழியாக கல்லணைக்கு பஸ் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய ஊர்களில் இருந்து கார்களில் இந்த வழியாக செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு கிளிக்கூடு கிராமத்தின் அருகே திருச்சி போலீசார் யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் திருச்சி செல்ல வேண்டிய வாகனங்கள் வேங்கூர், சர்க்கார் பாளையம் வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளும் சுற்றுப் பாதையில் செல்ல…

Read More

தென்மேற்கு பருவ மழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அங்குள்ள அணைகள் முழுமையாக நிரம்பி அதன் உபரிநீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு வழியாக கல்லணையை அடைந்து அங்கிருந்து கொள்ளிடம், காவிரி ஆறுகளில் திறந்து விடப்படுகிறது. கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு இதனால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளிடத்தில் உள்ள கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காவிரியிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்பட்ட தண்ணீர் நேற்று முன்தினம் அய்யம்பேட்டை அருகே உள்ள கிராம பகுதிகளை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீரின் வரத்து அதிகரித்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது இந்தநிலையில் நேற்றும் கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.…

Read More

தஞ்சாவூர் கர்நாடக மாநிலத்தில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உள்ளன. இதனால் உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் நேற்று மாலை நிலவரப்படி அந்த அணையில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் கன அடி தண்ணீர் திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு தடுப்பணையில் இருந்து காவிரி ஆற்றில் 56,254 கன அடியும் கொள்ளிடத்தில் 90,405 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 7,003 கன அடி, வெண்ணாற்றில் 7,005 கன அடி, கல்லணை கால்வாயில் 2,219 கன அடியும்,…

Read More