Author: Karthick

கும்பகோணம் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் வருகிற 23-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் தாராசுரம், எலுமிச்சைங்காபாளையம், அண்ணலக்ரகாரம், திப்பிராஜபுரம், அரியத்திடல், சிவபுரம், உடையாளூர், சுந்தரபெருமாள்கோவில், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், பட்டீஸ்வரம், வலங்கைமான், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பிரகாஷ் தெரிவித்தார்.

Read More

சஞ்சு சாம்சன் (43*) மற்றும் தீபக் ஹூடா (25) ஆகியோர் ஷர்துல் தாக்கூரின் 3-வது இலக்கைத் தொடர்ந்து 162 ரன்களை சேஸிங்கில் சிறப்பாக விளையாடினர், இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. தொடரின் இறுதிப் போட்டி திங்கள்கிழமை நடைபெறவுள்ளது. நேரலை ஸ்கோர்கார்டு, பந்துக்கு பந்து வர்ணனை, கிரிக்கெட் ஸ்கோரை ஆன்லைனில் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சரிபார்க்கவும்

Read More

தஞ்சாவூர் கிருஷ்ணஜெயந்தியையொட்டி தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நவநீதகிருஷ்ணன் கோவில் தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு பல்வேறு திரவியங்களால் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெண்ணெய்தாழி அலங்காரம் இன்று (சனிக்கிழமை) திருமஞ்சனம், தொட்டில் உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணெய்தாழி அலங்காரமும், உறியடி உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர்…

Read More

அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் கொட்டப்படும் கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குப்பை மேடாக காட்சி அளிக்கும் கழிவுகள் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அதிராம்பட்டினம் நகர் பகுதியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் வழியில் மகிழங்கோட்டை பிரிவு சாலைக்கு அருகில் பல்வேறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையோரங்களில் குப்பைகள் தேங்கி குப்ைப மேடாக காட்சி அளிக்கிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் மேலும் இந்த கழிவுகளை நாய்கள் உள்ளிட்ட கால்நடைகள் தின்று விட்டு ஆங்காங்கே போட்டு விட்டு சென்றுவிடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிராம்பட்டினம் கிழக்கு…

Read More

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலையத்தில் 20-ந் தேதி(சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனையொட்டி அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பஸ்நிலையம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆர்.ஆர். நகர், காவேரி நகர், எலிசா நகர், நூற்பாலை, மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேலவஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, ஆலக்குடி, மானோஜிப்பட்டி ரெட்டிப்பாளையம் ரோடு, சிங்கப்பெருமாள்குளம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள். இந்த தகவலை 110 கி.வோ தொகுப்பு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

Read More

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். டீசரை தொடர்ந்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலான ‘பொன்னி நதி’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் படக்குழு…

Read More

புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும். அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங்கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்தமல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும். இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு…

Read More

கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, ஆகஸ்டு 14-ந் தேதியை “பிரிவினைவாத நினைவு தினமாக” அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடு முழுவதும் பிரிவினைவாத நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து நாட்டு மக்கள் கடுமையாக போராடினர். பல்வேறு போராட்டங்களின் விளைவாக நாட்டுக்கு விடுதலையை வழங்க ஆங்கிலேய அரசு முடிவு செய்தது. அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் தனித்தனி நாடாக பிரிய முடிவு செய்தது. புகைப்பட கண்காட்சி இதையடுத்து பாகிஸ்தான் 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி தனி நாடாக உதயமானது. அப்போது இந்தியாவில் இருந்து பலரும் பாகிஸ்தான் நாட்டுக்கு ரெயில் மூலம் பல்வேறு நெரிசல்களில் சிக்கி பயணம் செய்தனர். இதில் பலர் உயிரிழந்தனர். நாடு பிரிவினையின் போது, ரெயிலில் பயணம் செய்த பொதுமக்களின் வாழ்க்கை முறை குறித்து அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நாடு முழுவதும் உள்ள…

Read More

ஒரத்தநாடு வட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் பெறக்கூடிய ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர்குடிக்காடு, வடக்குகோட்டை, தெற்குகோட்டை, திருநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இதைப்போல நாளை பட்டுக்கோட்டை நகர்-2-ல் மகாராஜசமுத்திரம், பெருமாள் கோவில், லெட்சத்தோப்பு, பண்ணைவயல் ரோடு, வ.உ.சி. நகர், அறந்தாங்கி ரோடு மின் பாதைகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடக்கிறது. எனவே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்கண்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியத்தினர் தொிவித்துள்ளனா்.

Read More

1990 வருடம் தஞ்சை எஸ்.பி. மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டது.அந்த காலங்களில் எந்த ஒரு நோயாளிக்கும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டால் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே இந்த வியாதிகளுக்கு என்று சிறப்பு சிகிச்சை பகுதி (SUPER SPECIALITY DEPARTMENT OF UROLOGY) டாக்டர் எஸ். பாலசுப்ரமணியன் தலைமை மருத்துவராக துவங்கப்பட்டது. அந்த சமயங்களில் இந்த வியாதிகளுக்கு எல்லாம் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், மற்றும் டெல்டா மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு என்று சிறப்பு சிகிச்சை முறைகள் செய்துகொள்வதற்கு வசதிகள் இல்லை . இதனை மனதில்கொண்டுதான் டாக்டர் எஸ்.பி அவர்களால் இந்த மருத்துவமனை துவங்கப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் சிறுநீரக சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு சிறப்பு அறுவைசிகிச்சை முறைகளும் அறுவைசிகிச்சை இல்லாமலே சிறுநீர் கற்களை உடைக்கும் கருவிகளும் சிறுநீரக செயல் இழப்பு நோயாளிகளுக்கு ஹிமோடையாலிஸ் போன்ற சிகிச்சை முறைகளுடன் துவங்கப்பட்டது. ஆனால் சில வருடங்களிலேயே நோயாளிகளின் தேவைக்கு ஏற்பமேலும் மேலும் ஹோல்மியம் லேசர் ESWL போன்ற வசதிகளை சேர்த்து அதிநவீன…

Read More