மதுரை புதூர்ல ஒரு பைக்கை எடுத்தா, இருபது நிமிஷத்துல அழகர் கோவிலுக்குப் போயிடலாம். வருஷம் பூராம் அழகரு அங்கேயே தான் இருக்காரு. ஆனால்,அழகரு வருஷத்துல ஒரு தடவ மதுரைப் பக்கம் வந்துட்டுப் போவார்.. தங்கச்சி மீனாச்சி கல்யாணத்தப் பாக்க ஆசப்பட்டு அழகர்மலையில இருந்து, மதுரைக்கு கிளம்புவாரு… சும்மால்லாம் கிளம்பிட முடியாது,அங்க காவல் தெய்வமான பதினெட்டாம்படிக் கருப்புகிட்ட உத்தரவு வாங்கிட்டு தான் கிளம்ப முடியும். அங்க இருக்கிற ஒத்த கருப்ப சாமி, ஓராயிரம் கருப்பசாமியா மாறி பக்தர்களுக்குள்ள இறங்கி பாதுகாப்புக்குக் கூடவே வரும். சாமி இறங்கினவங்க ’திரி’ப் பந்தம் ஏந்தி, கையில் மொரட்டு அருவாளைத் தூக்கிக்கிட்டு கருப்பன் அருளோட சாமியாடிட்டு வருவதை எதிரில் நின்னு பார்த்தா அடிவயித்துல அமிலம் சுரக்கும். வருஷத்துக்கொரு தடவ வெளியே வர்றவர சும்மா விட்டுட முடியுமா? வர்ற வழியில கள்ளந்திரி,அப்பன் திருப்பதின்னு எல்லா ஊர்லயும் மண்டகப்படி போட்டு மரியாத பண்ணி கொஞ்சிக் கூத்தாடும் பக்தர்கள் அன்புல, தங்கச்சி கல்யாணத்துக்கு…
Author: Karthick
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நடைமுறைக்கு வருகிறது. இனி ரேஷன் கடைகளில் பணம் கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியதில்லை. upi மூலமாக இனி ரேஷன் கடைகளில் உங்கள் செல்போனைப் பயன்படுத்தியும் பொருட்களை வாங்கலாம்.பொது மக்களின் வசதிக்காக அடிக்கடி ரேஷன் கடைகளில் புதுப்புது வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ரேஷன் கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வருமானத்தை உயர்த்தவும், பொது மக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பொன்னியின் செல்வன் -2. இப்படத்தின் முதல் பாக வெற்றியை போலவே இரண்டாம் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வெளியான இரண்டு நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருவதாக கூறப்படுகிறது.
மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். தினத்தந்தி ஏப்ரல் 30, 11:56 pm Text Size டிம் டேவிட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 45 ரன்களுடனும் களத்தில் இருந்து வெற்றிக்கு வழிவகுத்தன. மும்பை, 16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், பட்லர் களமிறங்கினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன்…
சென்னை, ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக்கத்தில் ஆடின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் செயவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சென்னை அணியில்’கான்வே 92 ரன்கள் குவித்தார் இதையடுத்து 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தோல்விக்கு பிறகு பேசிய சென்னை அணி கேப்டன் தோனி கூறியதாவது , மிடில் ஓவரில் இரண்டு ஓவர்கள் சிறப்பாக பந்து வீச வேண்டிய இடத்தில் மோசமாக பந்து வீசினோம். நங்கள் வீசிய 2 மோசமான ஓவர்கள்…
தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அழகுறக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது. பெரியகோவிலின் கட்டமைப்பும், அதன் பிரமாண்டமும் அதை காண்பவர்களுக்கு எப்போதும் சிலிர்ப்பைத் தந்து வருகிறது. உலகம் முழுவதும் இருந்தும் தினமும் ஏராளமானோர் பெரியகோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் முன்பு சித்திரை திருவிழா 20 நாட்கள் நடைபெறும் பெருந்திருவிழாவாக இருந்து வந்தநிலையில் காலப்போக்கில் 18 நாட்களாக சுருங்கிவிட்டது. என்றாலும் இந்த விழா வெகு விமரிசையாகவே கொண்டாடப்பட்டன. காலப்போக்கில் பல்வேறு காரணங்களால் நின்றுபோன இந்த விழாக்கள் மீண்டும் நாயக்கர் மன்னர்கள், அவர்களை தொடர்ந்து மராட்டிய மன்னர்கள் காலத்தில் நடத்தப்பட்டன. நின்று போன தேரோட்டம் காலப்போக்கில் தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்தன. மராட்டியர்களுக்கு பிறகு ஆங்கிலேயர் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. செலவு செய்து தேரை ஓட்டுவதற்கு யாரும் முன் வராததால் தேரோட்டம் நின்று போனது. இதனால் இடைப்பட்ட காலத்தில் சித்திரை திருவிழா களையிழந்து காணப்பட்டது. பெரியகோவிலில்…
மும்பை, நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியை ரோகித் வழிநடத்தி வருகிறார். இதுவரை இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி உள்ளது.. 7 போட்டிகளில் விளையாடி உள்ள கேப்டன் ரோகித் சர்மா 181 ரன்கள் எடுத்துள்ளார். இந்நிலையில் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு உடல் தகுதியுடன் இருக்கும் வகையில் ரோகித் சர்மா கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தான் கருதுவதாக சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். இப்போதைக்கு ரோகித் சர்மா இந்த சீசனில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முழு உடற்தகுதியுடன் அவர் இருக்க முடியும். அவர்…
தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பம் படிவங்கள் வழங்கும் விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் திருஞானசம்பந்தம், சேகர், ரத்தினசாமி, இளமதி சுப்பிரமணியன், ராமச்சந்திரன், ராம ராமநாதன், கோவிந்தராசு, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவக்கல்லூரி பகுதி செயலாளர் வக்கீல் சரவணன் வரவேற்றார். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவியேற்ற பின் எடப்பாடி பழனிசாமி முதல் முறையாக மே 4-ந் தேதி தஞ்சை வருகிறார். அவர் ஒரத்தநாட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதில் எனது ஏற்பாட்டின் பேரில், ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் மா.சேகர் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைய உள்ளனர். தஞ்சைக்கு வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுச்சியோடு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதில் அனைவரும் பாரபட்சம் காட்டாமல் ஆர்வமாக இருக்கவேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று அ.தி.மு.க.வில் உறுப்பினர்களை…
கொல்கத்தா, 16வது ஐபிஎல் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் நிதிஸ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங்செய்து வருகிறது. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் காடர்ன் மைதானத்தில் நடைபெற்றாலும் சேப்பாக்கத்தில் நடைபெறுவது போல சென்னை அணிக்கு ஆதரவு இருக்கிறது. மைதானம் முழுவதும் மஞ்சள் நிறமாகவே காட்சியளித்தது. மைதானத்தில் சென்னை அணி ரசிகர்களே அதிக அளவு நிரம்பி இருந்தனர். இந்த புகைப்படங்களை பகிர்ந்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்தில் போல்ட் பந்துவீச்சில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.அடுத்து வந்த ஷாபாஸ் அகமது 2 ரன்களில் வெளியேறினார். பின்னர் மேக்ஸ்வெல் , டு பிளசிஸ் இணைந்தது அதிரடி காட்டினர் . ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். தொடர்ந்து சிக்ஸர்கள் பறக்க விட்ட இருவரும் அரைசதம் அடித்தனர்.…