அரசு புறம்போக்கு நிலத்தில் 3 தலைமுறைகளாக வசித்து வரும் 7 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். தஞ்சாவூர் அரசு புறம்போக்கு நிலத்தில் வசித்து வருபவர்களில் சிலருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா விரைவில் கிடைத்து விடும். ஆனால் சிலருக்கோ இந்த வீட்டுமனைப்பட்டாவானது 2 அல்லது 3 தலைமுறைகளுக்கு பிறகு தான் கிடைக்கிறது. அப்படி 3 தலைமுறைகளாக அரசு புறம்போக்கு இடத்தில் வசித்து வந்த குடும்பத்தினருக்கு தற்போது இலவச வீட்டுமனைப்பட்டா கிடைத்து இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:- தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி வள்ளுவர்தெரு பகுதியில் 12 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தலைமுறை, தலைமுறையாக இந்த இடத்தில் தான் வசித்து வருகின்றனர். அரசு புறம்போக்கு இடத்தில் மண் சுவரால் ஆன குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த இடத்திற்கு பட்டா கேட்டு பல ஆண்டுகளாக முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு பட்டா இல்லாத…
Author: Karthick
தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறார்கள். இவ்வாறு அகற்றப்படாத இடத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் பூக்காரத்தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. நேற்று காலை தஞ்சை கீழவாசல் வண்டிப்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றுமாறு கடைக்காரர்களை வலியுறுத்தினர். 90 கடைகளில் அகற்றம் அதன்படி அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஒரு சில கடைகளில் முன்பு போடப்பட்டு இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் எந்திரம் உதவியுடன் அகற்றினர். 90 கடைகளில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் உத்தரவின்பேரில், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மேற்பார்வையில் உதவி…
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இந்திராகாந்தி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் சுப்பு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர் ஆகியோர் முன்னிலை வைத்தனர். விழாவில் தஞ்சை எம்.எல்.ஏ. டி.கே.ஜி. நீலமேகம் கலந்து கொண்டு 146 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி மீனாட்சிசுந்தரம் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாநகராட்சியில் தற்போது உள்ள 51 வார்டுகளில் 47 ஆயிரம் வீடுகள் உள்ளன. தஞ்சை மாநகராட்சி பகுதியில் தினமும் 50 மெட்ரிக் டன் குப்பைகள் வீடுகள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்களில் இருந்து வெளியேறுகிறது. இந்த குப்பைகளை சேகரிக்க ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைத்து அதனை மாநகராட்சி தூய்மை காவலர்கள் மூலம் சேகரித்து குப்பை கிடங்கில் இருப்பு வைத்து தரம் பிரிக்கப்படுகிறது. மேலும் வீடுகளில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரூ.2½ கோடியில் குப்பை தொட்டிகள் இந்த குப்பைகளை தூய்மை காவலர்கள் தினந்தோறும் சென்று பொதுமக்களிடம் வாங்கும் வகையில் அதற்கேற்றவாறு குப்பைத் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் “குப்பையில்லா தஞ்சை, குற்றமில்லா நகரம்” என்ற கொள்கையின்படி தஞ்சை மாநகராட்சியின் 15-வது நிதிக்குழுவின் கீழ் ரூ.2 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் 312 பெரிய அளவிலான வாகனங்களில் ஏற்றிச்செல்லும் வகையில் இரும்பு…
ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்திலிருந்து பொன்னி நதி பாட்டு செம்ம ஹிட்டு. அதை தொடர்ந்து தற்போது சோழா சோழா பாட்டை ரிலீஸ் பண்ணிருக்கு படக்குழு. ft. விக்ரமும் ஐஸ்வர்யா ராயும் வர்ற பாட்டு. அதாவது ஆதித்த கரிகாலனும், நந்தினியும். பொன்னி நதி பாட்டில், அதன் அழகை உணரவைத்த ஏ.ஆர்.ரஹ்மான், இப்பாட்டில் சோழர்களின் போர்களத்தையும் , ஆதித்ய கரிகாலனின் மனநிலையையும் உணரச்செய்திருக்கிறார். புலிக்கொடியை கண்டதும் மெய்சிலிர்த்து கண் கலங்கி விட்டது. புலிக்கொடி என்றும் வீழாது. சோழர்களின் பெருமை ஓங்கட்டும். எப்போடா படம் ரிலீஸ் ஆகும்ன்னு இருக்கு. https://www.youtube.com/watch?v=DYWe6v2TW14
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோப்ரா’. இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விக்ரம் 7 வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி கோப்ரா படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று அளித்துள்ளது. இதனிடையே படம் வெளியாக இன்னும் ஓரிரு வாரங்களே உள்ளதால் அடுத்த வாரத்தில் கோப்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகும் என கூறப்படுகிறது.
Mars is also called Mangala. Mars is also called Angaraka, meaning one who is red in colour. He is considered as the son of Bhumi, the earth goddess. He is the god of war. Generally, vaitheeswaran means ‘God of healing”. It is said that types of 4000+ diseases can be cured if prayed the Lord Vaitheeswaran. One of main highlights of the temple is the Lord faces the west. A devotee has the value of visiting and worshipping 1000 shiva temples if he/she worships the Lord faces the west direction. Another higher highlight of the temple is the Lord Graces…
Chandra is a lunar god. True to say that the Moon is lord of plants and vegetation. Chandra is credit with young, energetic, beautiful, 2 armed and having lotus in hands. With the support of ten white horses, he rides his chariot across the sky by every night. He is also called as According to the Hindu Astronomy, he presides over Monday. He is married to27 Nakshatras. Three types of incidents are told as the history. Let see one by one. Lord Vishnu distributed the Amurtham among devas. One of the asuras disguised as deva tasted the Amurtham distributed by…
அன்னை இந்தியாவில் உள்ள 2 கோயில்கள் மட்டுமே கடவுளின் ராஜாவுக்கு (சூரிய கடவுள்) அர்ப்பணிக்கப்பட்டவை என்பதை அறிந்து கொள்வது அவசியம். கிழக்கு கங்க வம்சத்தின் மன்னர் முதலாம் நரசிம்மதேவா கோனார்க் சூரியன் கோயிலையும், சோழ வம்சத்தின் முதலாம் குலோத்துங்க சோழன் சூரியனார் கோயிலையும் கட்டியதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் தென் பகுதியில் உள்ள சூரியன் கோவில் பற்றிய சில பயனுள்ள தகவல்களைப் படிப்போம். ஒடிசாவில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கோனார்க் சூரியன் கோயில் இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள சூரியனார் கோயில். தஞ்சாவூர் மாவட்டத்தில் சூரியனார்கோயில் கிராமத்தில் சூரியனார் கோயில் உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருப்பது கோயிலின் சிறப்புகளில் ஒன்றாகும். இக்கோயில் ஆடுதுறைக்கு வடக்கே சரியாக 2 கிமீ தொலைவிலும், கும்பகோணத்திலிருந்து கிழக்கே 15 கிமீ தொலைவிலும், மயிலாடுதுறையிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும் உள்ளது. கும்பகோணம் – மயிலாடுதுறை பாதையில் கோயில் உள்ளது. அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடைப்பட்ட…
தஞ்சை மாவட்டத்தில் 1,700 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. கொரோனா தடுப்பூசி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்கள் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி, 2-ம் தவணை தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 14-ந் தேதி வரை 18 வயது முதல் 59 வயது வரையிலானவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் உரிய கட்டணத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கடந்த 15-ந் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை 18 வயதுக்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. மெகா…