தஞ்சாவூர் நீர்வள ஆதாரத்துறை காவிரி வடிநிலக்கோட்ட கண்காணிப்பு பொறியாளராக சமீபத்தில் பொறுப்பேற்ற முருகேசன் நேற்று மாலை கல்லணையில் ஆய்வு மேற்கொண்டார். கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணை கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அணையில் உள்ள ஷட்டர்களை ஏற்றி இறக்கி ஆய்வு செய்த அவர் டெல்டா பாசனத்திற்கு நீர் பங்கீடு விவரங்களை கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் அதனை சமாளிக்க போதுமான அளவிற்கு சவுக்கு மரங்கள், மணல் போன்றவற்றை இருப்பு வைக்கவும், ஆறுகளில் சுற்றுலா பயணிகள் இறங்காமல் இருக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சிவக்குமார், கல்லணை உதவி பொறியாளர் திருமாறன், உதவி பொறியாளர்கள் அன்பு செல்வன், அரவிந்த், நிஷாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.
Author: Karthick
தஞ்சை வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கோட்டாட்சியர் ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:- கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தோழகிரிப்பட்டி கோவிந்தராஜ்:- திருமலைசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்குவதில் முரண்பாடுகள் ஏற்படுகிறது. கடன் தர பல்வேறு கெடுபிடிகள் செய்வதை, தளர்த்தி கடந்த காலங்களில் வழங்கியது போன்று கடன் வழங்க வேண்டும். தமிழக அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.195 உயர்த்தி வழங்க வேண்டும். சாலை சீரமைக்க வேண்டும் ஆழ்துளை கிணற்று பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் புண்ணியமூர்த்தி:- ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் அருகே அய்யன்பட்டி-கீராத்தூர் சாலையில் 700 மீட்டர் நீளம் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. பாச்சூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாலையின் இருபுறமும் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனை சரி…
தஞ்சாவூர் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம் வடக்கு கிராமத்தில் வீரகாளியம்மன் கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 14-ந் தேதி காலை அம்மனுக்கும், பரிவார தெய்வங்களுக்கும் காப்பு கட்டுதல், பந்தல்கால் நடுதல், பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. கடந்த 22-ந் தேதி பால்குடம், அலகு காவடி எடுத்தல், இசை நிகழ்ச்சி, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. அன்று மாலை சக்தி கரகம், அம்மன் சிலைகள் காவிரி கரைக்கு புறப்படுதல், இரவு காவிரி கரையில் இருந்து சக்தி கரகம் புறப்பட்டு அம்மன் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 23-ந் தேதி காலை அம்மன் வீதியுலாவும், மாலை கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து 24-ந் தேதி விடையாற்றி மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமைகள், விழா குழுவினர், மகளிர் குழுவினர் மற்றும் இளைஞர் நற்பணி…
கும்பகோணம், கீழ கபிஸ்தலம், கரம்பயத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. தஞ்சாவூர் கும்பகோணம் தோப்புத் தெரு பின்புறம் காந்தி காலனி பகுதியில் உள்ள காளிகாபரமேஸ்வரி அம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. திருப்பணிகள் முடிவடைந்த நிலையில் குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி கடந்த 20-ந் தேதி காலை விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி, நவக்கிரக பூஜை, வாஸ்து பூஜை, கோ பூஜை நடந்தது. மறுநாள்(21-ந் தேதி) காலை 2-ம் கால விக்னேஸ்வர பூஜை, யாக பூஜைகள், நாடிசந்தானம், மஹாபூர்ணாஹூதி, மகாதீபாராதனை மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடும், அதனைத்தொடர்ந்து விமான கோபுர கலசத்திற்கு மகா குடமுழுக்கும், மகா தீபாராதனையும் நடந்தது. கீழகபிஸ்தலம் இதேபோல கபிஸ்தலம் அருகே உள்ள கீழ கபிஸ்தலம் கூத்தனாம் தோப்புத்தெரு மெயின் ரோடு காவிரி கரையோரம் அமைந்துள்ள உச்சி மகா காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக…
திருப்பந்தாள் அருகே இறந்தவரின் உடலை ஆற்றில் இறங்கி எடுத்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது. ஆகவே, மண்ணியாற்றின் குறுக்கே பாலம் கட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். தஞ்சாவூர் தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, பந்தநல்லூர் அருகே உள்ள நெப்பு கோவில் என்கிற நெய்குப்பை கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்த யாராவது இறக்க நேரிட்டால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்து செல்வதற்கு உரிய பாதை வசதி இல்லாததால் அப்பகுதியில் உள்ள மண்ணியாற்றில் இறங்கித்தான் எடுத்து சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் இறந்தார். அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு வழக்கம்போல மண்ணியாற்றில் இறங்கிதான் மயானத்திற்கு தூக்கிச் சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் யாராவது இறக்க நேரிட்டால் அவரது உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்ல பாதை வசதி இல்லை. இதனால், மண்ணியாற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தான் அவரது…
கும்பகோணத்தில், தொடர்ந்து 7 மணி நேரம் சிறுமிகள் கரகாட்டம் ஆடினர் தஞ்சாவூர் கும்பகோணத்தில் பரதநாட்டியம் பயிலும் மாணவிகள் 123 பேர், அழிந்து வரும் கரகாட்ட கலையை பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து 7 மணி நேரம் கரகாட்டம் ஆடி சாதனை படைத்தனர். இதில் சிறுவர்-சிறுமிகளும் அடங்குவர். இதற்கான நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது தஞ்சாவூர் கும்பகோணம் பகுதியில் கடந்த பல நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணியளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்தது. இதனால், சாலைகயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இந்த மழையின் காரணமாக கும்பகோணம் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. பரவலாக பெய்த இந்த கன மழையால் குறுவை மற்றும் சம்பா பயிர் சாகுபடிக்கு தேவையான நீர் ஆதாரம் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதேபோல, பட்டுக்கோட்டையில் சூறைக் காற்றுடன் 45 நிமிடம் பலத்த மழை பெய்தது. பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயில் வாட்டி வதைந்து வந்தநிலையில் நேற்று…
நெல் விற்றதால் கணவருக்கு கிடைக்க வேண்டிய ரூ.18 லட்சத்தை வாங்கி தரக் கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பருத்தியப்பர் கோவிலை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சசிகலா. இவர் நேற்று தனது கிராமத்தை சேர்ந்த சிலருடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் திடீரென சசிகலா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த போலீசார் விரைந்து வந்து அவரிடம் இருந்த பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் சசிகலாவிடம் போலீசார் விசாரணை செய்தபோது அவர் கண்ணீர் மல்க கூறியதாவது:- நான் எனது 2 மகன்களுடன் வசித்து வருகிறேன். என் கணவர் கடந்த 2017-ம் ஆண்டு செங்கிப்பட்டியை சேர்ந்த ஒருவருடன் நெல் வியாபாரம் செய்து வந்தார். விவசாயிகளிடம் நெல்லை வாங்கி வந்து அந்த நபரிடம் விற்று வந்தார். அந்த நபரிடம் இருந்து வர…
தஞ்சாவூர் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 27 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 18 பேர் தி.மு.க.வை சே்ாந்தவர்கள் ஆவர். அ.தி.மு.க.வினர் 7 பேரும், பா.ம.க., பாரதீய ஜனதாவை சோ்ந்த தலா ஒருவரும் உறுப்பினராக உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த காயத்ரி அசோக்குமார் தலைவராகவும், உள்ளூர் டி.கணேசன் துணைத் தலைவராகவும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கூட்டத்தில், 26 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கூட்ட அறையில் அனைவருக்கும் புதிய இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் ரத்து இந்தநிலையில் கூட்ட அறைக்கு வந்த துணைத்தலைவர் கணேசன் அவருக்குரிய இருக்கையில் அமராமல் தலைவர் இருக்கையின் அருகில் ஆணையருக்கு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்திருந்திருந்தார். அப்போது கூட்ட அறைக்கு வந்த தலைவர் காயத்ரி அசோக்குமார் ஒன்றிய குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்து விட்டு வெளியே சென்றார். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து…
தஞ்சையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 26-ந் தேதி நடக்கிறது தஞ்சாவூர்மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் எனது (கலெக்டர்) தலைமையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு திட்ட விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கூட்டுறவு, நீர்ப்பாசனம், கால்நடை, மின்சாரம் போன்ற விவசாயம் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் தங்கள் பெயர், ஊர் மற்றும் வட்டாரத்தை காலை 9 மணி முதல் 10…