பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கம் புதிய படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த 18ஆம் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவில் தொடங்கியது. இது கோலார் தங்க வயலில் வரலாற்று பின்னணியில் எடுக்கப்படுகிறதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் விக்ரம், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் படத்திற்கான தலைப்பை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். தங்க வயலின் வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு தங்கலான் என பெயர் வைத்துள்ளனர். இந்த தலைப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியுள்ளது.
Author: Karthick
குடிசை பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தீபாவளி நாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும் , குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும்…
இந்தியா vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை 2022 நேரடி வர்ணனை மற்றும் கிரிக்கெட் ஸ்கோர்: மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் சூப்பர் 12 ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா, பாபர் ஆசாமின் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய வைத்தது. ஷான் மசூத் மற்றும் இப்திகார் அகமது மற்றும் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரின் அரைசதங்களின் உதவியால் பச்சை நிறத்தில் இருந்த ஆண்கள் 20 ஓவர்களில் 159/8 என்று தங்கள் மேற்கோளை முடித்தனர்.
தீபாவளி பண்டிகை இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது புத்தாடையும், பட்டாசும் தான் தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள்.தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்கு இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில் மக்கள் அதற்காக தயாராகி வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே துணி கடைகள், இனிப்பு கடைகள், பட்டாசு கடைகளில் விற்பனை களை கட்ட தொடங்கியது. அதேபோல் பட்டாசு கடைகளிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்க ஆரம்பித்தனர். சொந்த ஊருக்கு மக்கள் படையெடுப்பு அவ்வப்போது மழை வந்து தீபாவளி விற்பனைக்கு இடையூறு செய்தாலும் மழை நின்ற பிறகு மீண்டும் வியாபாரம் நடைபெற்று வருகிறது. அதேபோல் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தஞ்சை மாவட்டத்தில் உள்ள வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்…
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அறுவடை செய்த நெல் நனைந்து விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கொள்முதலில் 22 சதவீத ஈரப்பதம் வரை தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிகளுக்கு விடுமுறை வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் நேற்றுஅதிகாலை வரை அவ்வப்போது மழை பெய்தது. மழையின் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் மழையில் சிரமத்துடன் பள்ளிக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து நேற்று ஒரு நாள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவு பிறப்பித்தார். இதனால் பள்ளிக்கூடங்கள் செயல்படவில்லை. கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. அவ்வப்போது பெய்யும் மழையின் காரணமாக தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட்டு…
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு, புத்தாடை, பலகாரம் தான் நினைவுக்கு வரும். இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளன. தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டது. ஜவுளி எடுக்க, மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, பட்டாசு வாங்குவதற்கு என்று மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தஞ்சை கடைவீதிகளில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படுகிறது. தஞ்சை இர்வீன்பாலத்தில் இருந்து பழைய பஸ் நிலையம் செல்லும் சாலை, தெற்கு அலங்கம், கீழராஜவீதி, அண்ணா சிலையில் இருந்து கீழவாசல் செல்லும் சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. அலைமோதும் மக்கள் கூட்டம் சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது. மேலும் சாலையோரத்தில் தரைக்கடைகளும் ஆங்காங்கே போடப்பட்டுள்ளன. இதனால் காந்திஜி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்துக்கு செல்லும் பஸ்கள்…
தஞ்சை மூலை அனுமார் கோவிலில் வருகிற 24-ந்தேதி தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 25-ந்தேதி சூரிய கிரகண பாலாபிஷேகம் நடைபெறுகிறது. தீபாவளி சிறப்பு வழிபாடு தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன. அதன்படி வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஜாங்கிரிகளால் ஆன சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது. சூரிய கிரகணம் பாம்பு (ராகு/கேது) சூரிய மற்றும்…
தஞ்சை, கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து வந்தது. இந்த கோரிக்கையை ஏற்று தென்னக ரெயில்வே நிர்வாகம் வருகிற 27-ந்தேதி முதல் தஞ்சை மற்றும் கும்பகோணம் வழியாக மும்பைக்கு நேரடி ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி 27-ந் தேதி முதல் வதோத்ரா, சூரத், வாசை ரோடு, கல்யாண் (மும்பை), பூனா, மந்த்ராலயம், ரேணிகுண்டா, சென்னை எழும்பூர், கடலூர் துறைமுகம், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக அகமதாபாத்-திருச்சி இடையே ஒரு வாராந்திர குளிர்கால சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக மேற்கு மண்டல ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரெயில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு சனிக்கிழமை அதிகாலை 3.45 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில்…
நடிகர் அஜித்குமார் 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் சினிமாவில் நடிப்பதோடு ஓய்வு நேரங்களில் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்து பிரபலமான இடங்களை சுற்றிப் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த சில நாட்களாக பெல்ஜியம், இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மோட்டார்சைக்கிள் பயணம் சென்றார். விசாகப்பட்டினத்தில் துணிவு படப்பிடிப்பில் பங்கேற்று முடித்ததும் இமயமலை பகுதியில் மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்டு கார்கில் நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்தினார். கேதார்நாத், பத்ரி நாத் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளத்தில் வெளியானது. அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு மோட்டார்சைக்கிளில் உலகை சுற்ற அஜித்குமார் திட்டமிட்டு உள்ளார். அதாவது 62 நாடுகளில் தொடர்ந்து 18 மாதங்கள் மோட்டார்சைக்கிளில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றரை…
ஜோதிகா மம்முட்டியுடன் இணைந்து நடிக்கும் ‘காதல்’ திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. சென்னை, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, ’36 வயதினிலே’ திரைப்படம் மூலம் மீண்டும் நடிக்க தொடர்கினார். தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன்பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை தேர்வு செய்து நடித்தார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா தற்போது மம்முட்டியுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கவுள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஜோதிகா மலையாள சினிமாவில் நடிக்கிறார். கடைசியாக 2009 இல் வெளியான ‘சீதா கல்யாணம்’ திரைப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று படக்குழு பர்ஸ்ட்லுக்…