தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவையாறு வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் – மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கு திருவையாறு கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இந்தப் புறவழிச்சாலை திட்டத்துக்காக நன்செய் நிலங்களைக் கைப்பற்றி அழிக்க வேண்டாம் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது, இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பறிபோவதை உணா்த்தும் வகையில் விவசாயிகள் வாழை இலை, வாழைத்தாா், நெற்கதிா்கள், நாற்றங்கால்கள், தேங்காய், கருப்புக் கொடி போன்றவற்றை கையில் ஏந்தி முழக்கமிட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னோடி விவசாயி புனவாசல் டி. சம்பந்தம் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பின்னா் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
Author: Karthick
தஞ்சாவூர்; ஆமை வேகத்தில் சீரமைக்கும் பணி நடைபெறுவதால் 4 ஆண்டுகள் ஆகியும் சிவகங்கை பூங்கா பொலிவு பெறாமல் உள்ளதால் 150-வது ஆண்டுகள் கொண்டாட்டம் தடைபடுகிறது. எனவே பணியை துரிதப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிவகங்கை பூங்கா தஞ்சை மாநகரின் மையப்பகுதியில் சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா, பெரியகோவிலை ஒட்டியுள்ளது. இந்த பூங்காவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் சிவகங்கை குளம் உருவாக்கப்பட்டது. இதை சுற்றி பொதுமக்களுக்கான பூங்கா ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் 1871-72-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இந்த பூங்காவில் காலத்துக்கேற்றவாறு அவ்வப்போது புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு வந்துள்ளன. www.Thanjavurnews.in தஞ்சை பகுதி மக்கள் மட்டுமல்லாமல், வெளியூா் மக்களிடையேயும் இந்த பூங்கா பிரபலமானது. இதனால் பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவுக்கும் வந்து செல்வது வழக்கம். இதனால் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோா் வந்து செல்வா். விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். நீர் சறுக்கு பூங்காவில் ஏராளமான பசுமையான மரங்கள்,…
தஞ்சையில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக வடிகால் உடைந்ததால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. சாய்ந்த மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்கும் பணியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். மழை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தஞ்சை மாநகரில் நேற்றுமாலை 3½ மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இடியுடன் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை கீழவாசல் கந்தப்பொடிக்கார தெருவில் இடிப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். தஞ்சை ரெயில் நிலையத்தின் நுழைவு பகுதியில் டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு முன்பு மழை தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் டிக்கெட் எடுக்க வந்த பயணிகள் தங்களது உடமைகளை தரையில் வைக்க முடியாமல் அவதிப்பட்டனர். தஞ்சை கொடிமரத்துமூலை பகுதியில் உள்ள அகழியில் தண்ணீர் நிரம்பியதால் அங்கிருந்து வடிகால் மூலம் வடவாற்றிற்கு தண்ணீர்…
சதய விழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பாக ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037 ஆவது சதய விழா புதன்கிழமை காலை திருமுறையுடன் தொடங்கியது. தொடர்ந்து கவியரங்கம், பரதநாட்டியம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான வியாழக்கிழமை திருமுறை ஓதுவார்களுக்கு மாவட்டம் நிர்வாகம் சார்பாக புத்தாடை வழங்கி மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரிய கோயிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகில் உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து இராஜ வீதிகளில் திருமுறை வீதி உலா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு வியாழக்கிழமை…
சங்க காலச் சோழனான கரிகாலன் காலத்தில் இலங்கை மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டைக் கைப்பற்றி 12,000 சிங்களவர்களைச் சிறை செய்து, சோழ நாட்டுக்குக் கொண்டு வந்தான் எனப் புறநானூறு கூறுகிறது. கைதிகளாகக் கொண்டு வரப்பட்ட சிங்களவர்களைக் கொண்டு காவிரிக்குக் கரை கட்டினான் என்ற செய்தி காணப்படுகிறது. கரிகாலச் சோழனின் இலங்கைப் படையெடுப்பு கி.பி. 111 முதல் கி.பி. 114 ஆம் ஆண்டுக்கு உள்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் பிற்காலச் சோழர்கள் வலிமை பெறத் தொடங்கினர். பல்லவ, பாண்டிய நாடுகளைச் சோழர்கள் வெற்றி கொண்டனர். குறிப்பாக, பாண்டிய மன்னர்களுக்கும், சோழ மன்னர்களுக்கும் இடையே கடும் பகை மூண்டது. இச்சூழ்நிலையில் பாண்டியர்களுக்குச் சிங்கள மன்னர்கள் அவ்வப்போது துணைப் புரிந்தனர். இதன் விளைவாக சிங்கள மன்னர்களை ஒடுக்கி, இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் சோழர்களுக்கு ஏற்பட்டது. எனவே, கி.பி. 923 – 934…
எண்ணற்ற நாடுகளை வெற்றிகொண்டு, கட்டியாண்ட சோழப் பேரரசர்களின் அரண்மனைகள் எல்லாம் என்னவாயின? பிற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சாவூர் பல வரலாற்றுச் சிறப்புகளைப் பெற்றது. சோழ மன்னன் விஜயாலயன் காலத்தில் தொடங்கி மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில் வளர்ச்சி பெற்று உயர்ந்த நிலையை எட்டியது. பின்னர் வந்த ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாக்கினார். இதனால், கி.பி. 850 முதல் கி.பி. 1026 வரை 176 ஆண்டுகள் புகழ்பெற்று விளங்கிய தஞ்சாவூர், அதன் பிறகு தனித்தன்மை இழக்கத் தொடங்கியது. மூன்றாம் குலோத்துங்கச் சோழன் இறப்புக்குப் பிறகு கி.பி. 1218 ஆம் ஆண்டில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின் மீது படையெடுத்து உறையூரையும், தஞ்சாவூரையும் தீயிட்டு அழித்தான். இதில், அரண்மனை, மாளிகைகள், மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்துக் கட்டடங்களும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதனால், தஞ்சாவூர் கோட்டைப் பகுதியில் இருந்த சோழ மாளிகைகளும் அழிக்கப்பட்டன. பாண்டியரின் படையெடுப்பால் அழிந்த தஞ்சை நகரமும், கோட்டையும் மீண்டும்…
தஞ்சையில், பள்ளி ஆசிரியை ஆற்றுக்குள் இறங்கி விடிய, விடிய போராட்டத்தில் ஈடுபட்டார். தனது சங்கிலியை பறித்து சென்றது குறித்து யாரும் கேட்காததால் அவர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார். ஆற்றுக்குள் இறங்கிய ஆசிரியை தஞ்சையை அடுத்த பள்ளியக்ரஹாரம் ஹரி நகரை சேர்ந்தவர் ரேவதி. இவர், மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பகல் 12 மணி அளவில் இவர் வெண்ணாற்றங்கரையில் உள்ள விடுதி அருகே நடந்து சென்றார். பின்னர் அருகில் திடீரென ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் பார்த்தனர். வெகுநேரமாக நின்று கொண்டிருப்பதை பார்த்து ஆசிரியை ரேவதியை ஆற்றில் இருந்து வெளியே வருமாறு கூறினர். ஆனால் அவர் வர மறுத்து விட்டார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ரேவதியின் குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அழைத்தும் ரேவதி ஆற்றில் இருந்து வெளியே வரவில்லை. அவரை யாராவது அழைத்து…
இன்று போய்ப் பார்த்தால் நம்பவே முடியாது, இந்தச் சிற்றூர்தான் சோழப் பேரரசின் தலைநகராகவும் பெரு நகராகவும் விளங்கியது என்பதை! தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து தெற்கே 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழையாறை. இப்போது, சிற்றூராக உள்ள பழையாறை பல்லவர் காலம் முதல் பிற்காலச் சோழர் காலம் வரை புகழ்பெற்ற பெருநகரமாகத் திகழ்ந்தது. அரசிலாற்றுக்கும், முடிகொண்டானாறுக்கும் இடையே 5 மைல் நீளமும், மூன்று மைல் அகலமும் கொண்ட பரந்த நகரமாக இருந்த இந்நகரம் ஆறை, பழைசை, மழபாடி, பழையாறு, நந்திபுரம் என பல பெயர்களைப் பெற்றிருந்தது. பல்லவர் ஆட்சி தமிழ்நாடெங்கும் பரவியபோது, பல்லவ நாட்டின் தென் பகுதிக்கு இந்த ஊர் தலைநகரமாகவும் இருந்தது. பின்னர், விஜயாலயன் காலம் முதல் மூன்றாம் ராஜராஜன் காலம் வரை சோழ மன்னர்களின் வாழ்விடமாக இருந்த இப்பெருநகரம், அவர்களுடைய இரண்டாவது தலைநகரம் என்ற புகழும் பெற்றது. முதலாம் ராஜராஜன் காலம் வரை பழையாறை என்றும், முதலாம் ராஜேந்திரன்…
உலகில் நிலைத்திருந்த பேரரசுகளைப் பட்டியலிடச் சொன்னால் கிரேக்கத்தையும் ரோமாபுரியையும் சொல்பவர்களில் யாரும் சோழப் பேரரசைச் சொல்வதில்லை. சொல்ல வேண்டும் என்பதுகூடத் தெரிவதில்லை. இந்திய மண்ணில் எத்தனையோ மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், பெரும்பாலான மன்னர்கள் எல்லா போர்களிலும் வெற்றி பெற்றதில்லை. சில போர்களில் தோல்வியும் அடைந்துள்ளனர். பல போர்களைச் சந்தித்து அனைத்திலும் வெற்றி பெற்ற மன்னர்கள் 6 பேர் மட்டுமே என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர்களில் தமிழ் மன்னர் ராஜராஜசோழனும் ஒருவர். அவர் சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடினார் என்பது மட்டுமல்ல; தோல்வியே சந்திக்காத மாமன்னன் என்ற புகழையும் பெற்றவர். அவரது ஆட்சிக்காலத்தில் எல்லையே கிடையாது. அந்த அளவுக்குப் பரந்து விரிந்த நிலப்பரப்புடைய நாடாகச் சோழ தேசம் இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் பெருமையாகக் குறிப்பிடுவர். ராஜராஜ சோழன் தனது படைப் பிரிவுகளை அவ்வளவு நேர்த்தியாகப் பிரித்து, அனைவருக்கும் மிகச் சிறந்த போர்ப் பயிற்சியையும் கொடுத்தார். ராஜராஜ சோழன்…
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,037 வது சதய விழா திருமுறையுடன் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் முடிசூட்டிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1,037- வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து அப்பர் பேரவை சார்பில் திருமுறை பாராயணம் நடைபெற்றது. முதல்நாளான இன்று கருத்தரங்கம், கவியரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை 8 மணிக்கு மாமன்னன் ராஜராஜ சோழன் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார். பின்னர் திருமுறை வீதி உலாவும், அதனைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ராஜராஜன் சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். மேலும், பெருவுடையாருக்கும், பெரிய நாயகிக்கும் 48 வகையான பேராபிஷேகமும் நடைபெற உள்ளது.…