தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 கலை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது 1 தஞ்சாவூர் வீணை 2 தலையாட்டி பொம்மை 3 தஞ்சாவூர் ஓவியம் 4 தஞ்சாவூர் கலை தட்டு 5 நெட்டி வேலைப்பாடு 6 சுவாமி மலை வெண்கல சிலை 7 திருபுவனம் பட்டு சேலை 8 நாட்சியார் கோவில் குத்து விளக்கு
Author: Karthick
தர்பூசணியில் 90% நீர் உள்ளது, இது கோடையில் நீரேற்றமாக இருக்க பயனுள்ளதாக இருக்கும். தர்பூசணியில் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இந்த பொருட்கள் உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்கள் அல்லது எதிர்வினை இனங்கள் எனப்படும் மூலக்கூறுகளை அகற்ற உதவும். வளர்சிதை மாற்றம் போன்ற இயற்கை செயல்முறைகளின் போது உடல் ஃப்ரீ ரேடிக்கல்களை உருவாக்குகிறது. புகைபிடித்தல், காற்று மாசுபாடு, மன அழுத்தம் மற்றும் பிற சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மூலமாகவும் அவை உருவாகலாம். சுமார் 154 கிராம் எடையுள்ள ஒரு கப் தர்பூசணி துண்டுகள் 12.5 மில்லிகிராம் வைட்டமின் சி அல்லது ஒரு நபரின் தினசரி தேவைகளில் 14% முதல் 16% வரை வழங்குகிறது. Health benefits of Water Melon 1. Helps you stay hydrated as it contains 90% of water. 2. It have anti Cancer effects as it contains several plant compounds including Lycopene…
தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாநகராட்சி பகுதிகளுக்கு திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திற்கு வரும் குடிநீர் வினியோகம் செய்யும் பிரதான குழாய் பழுதடைந்துள்ளதால் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் சரி செய்யும் பணிகள் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 1-வது வார்டு முதல் 51-வது வார்டு வரையிலான அனைத்து வார்டுகளிலும் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்தமாதம் (டிசம்பர்) 1-ந் தேதி வரை 3 நாட்கள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் 7 வருடங்களாக காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். இருவரையும் சமரசப்படுத்தி சேர்த்து வைக்க சில பிரபலங்கள் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து இருவரும் தீவிரமாக படங்களில் நடித்தனர். இந்த நிலையில் சமந்தாவை விவாகரத்து செய்த நாகசைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாகவும், இருவரும் ரகசியமாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின. இதனை இருவரும் உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் நாக சைதன்யாவும், சோபிதா துலிபாலாவும் வெளிநாட்டில் ஜோடியாக சுற்றும் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் காதலிப்பது உறுதியாகி இருப்பதாக தெலுங்கு பட உலகினர் பேசுகிறார்கள். மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன்…
முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ஆக்லாந்து, இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. 20…
அவதார்: தி வே ஆப் வாட்டர் திரைப்படம் 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில் தற்போது ‘அவதார்: தி வே ஆப் வாட்டர்’ படத்தின் புதிய டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ்…
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. முதலில் இந்த படம் கன்னட மொழியில் மட்டுமே வெளியிடப்பட்டது. கர்நாடகாவில் விமர்சன ரீதியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், நல்ல வசூலையும் குவித்தது. இதையடுத்து, படத்தை மற்ற மொழிகளில் வெளியிட படத்தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் முடிவு செய்து இதனடிப்படையில் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் சமீபத்தில் ‘காந்தாரா’ திரைப்படம் வெளியிடப்பட்டது. தற்போது அனைத்து மொழிகளிலும் இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலரும் பாராட்டினர். , ‘காந்தாரா’ திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ.400 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, காந்தாரா திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது . அமேசான் பிரைமில் இன்று வெளியானது . தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாய், 8வது 20 ஓவர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து அணி பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த டி20 உலகக்கோப்பை 2024ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்க உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அந்த உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக இதுவரை 12 அணிகள் முன்னேறி உள்ளன. மீதமுள்ள 8 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. அதில் ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 2 அணிகள், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 8 அணிகளும் இதில் பங்கேற்க உள்ளன. நியூசிலாந்து,…
இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. நேப்பியர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. வெலிங்டனில் நடக்க இருந்த தொடக்க ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மவுன்ட் மாங்கானுவில் நடந்த 2-வது ஆட்டத்தில் 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடிய இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி பிலிப்ஸ் மற்றும் கான்வேயின் அரைசதத்துடன் 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம்…
ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அவரது தோற்றத்தை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டு உள்ளனர். ஜெயிலர் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளும் ஒவ்வொருவராக படப்பிடிப்பில் தற்போது இணைந்து வருகிறார்கள். அவர்கள் தனியாக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு இறுதியில் ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் காட்சிகளை எடுக்க உள்ளனர். ஜெயிலர் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் நடிக்கிறார். அவரும் இப்போது படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார். முன்னதாக ரஜினிகாந்தை சிவராஜ்குமார் சந்தித்து பேசினார். அந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பில் நடிகை ரம்யா கிருஷ்ணனும் இணைந்து இருக்கிறார் ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயனும் நடிக்கிறார் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் படப்பிடிப்பில் சிவராஜ்குமாரும், சிவகார்த்திகேயனும் சந்தித்த புகைப்படங்களும் வலைத்தளத்தில் வெளியாகி உள்ளன. ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா அல்லது சிவராஜ்குமாரை சந்திக்க…