Author: Karthick

Job

தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு டிசம்பா் 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையத் தலைவரும், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளருமான சி. தமிழ்நங்கை தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள விற்பனையாளா் பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு தஞ்சாவூரில் புதுக்கோட்டை சாலையிலுள்ள கமலா சுப்பிரமணியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பா் 15 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரா்களுக்கு திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாகத் தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ் அல்லது தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத்திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நோ்முகத் தோ்வுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு குழுவிடம் அளிக்க…

Read More

நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது. மிர்புர், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வங்காளதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேச அணி 2-0 என தொடரை வென்றது. நேற்றைய போட்டிக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:- எனது கை விரலில் எலும்பு முறிவு எதுவும் ஏற்படவில்லை. இதனால் நான் பேட்டிங் செய்ய வந்தேன். வங்காளதேச அணியின் 6 விக்கெட்டுகளை 69 ரன்னுக்குள் வீழ்த்திய…

Read More

இயக்குனர் பா.ரஞ்சித் பிறந்தநாளை முன்னிட்டு ‘தங்கலான்’ படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை, நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். https://twitter.com/StudioGreen2 இந்த படம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் கூறுகையில், இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று கூறியிருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இயக்குனர் பா.ரஞ்சித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. விக்ரமும் பா.ரஞ்சித்தும் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Read More

தஞ்சாவூர் புயல் எச்சரிக்கை எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள் தயாராக உள்ளது என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மேலாண்மை குழு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (அதாவது இன்று) புயலாக வலுப்பெற்று வட தமிழக கடற்கரைக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளதால் 3 நாட்கள் தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 251 நிவாரண மையங்கள் புயல் தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 251 நிவாரண மையங்கள்,…

Read More

வெற்றி நெருக்கடியான இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மிர்பூர், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் மிர்பூரில் நடந்த முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.- இந்தியா-வங்காளதேச அணிகள் மேலும் 2-வது ஒரு நாள் போட்டி மிர்பூரில் நாளை (7-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. இந்த ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. தோற்றால் ஒரு நாள் தொடரை இழந்துவிடும். இதனால் இந்திய அணி வங்காளதேசத்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. லிட்டன் தாஸ் தலைமையிலான வங்காளதேச அணி இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று ஒருநாள் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.…

Read More

அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்யும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுஷ் நடிப்பில் இந்த வருடம் மாறன், தி கிரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள ‘வாத்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. அடுத்து கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கிறார். ராக்கி, சாணிக்காகிதம் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான அருண் மாதேஸ்வரன் டைரக்டு செய்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து, 2-வது கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுசுக்கு அண்ணனாக நடிக்கிறார். தற்போது படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். தனுசும், சிவராஜ்குமாரும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சிவராஜ்குமார் கூறும்போது, ”நான் தனுசின்…

Read More

ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறக்கூடிய கண்ணந்தங்குடி, ஆழிவாய்க்கால், சேதுராயன் குடிக்காடு, தென்னமநாடு, பருத்திக்கோட்டை, பொய்யுண்டார்குடிக்காடு, கோவிலூர், ஆயங்குடி மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு நகர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Read More

நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள். தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே. சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக் கொண்டிருந்தார். வானரங்களில் பல வகை. உயரமானவை,குட்டையானவை என்று. அதில் ” சிங்கலிகா” என்று அழைக்கப்படும் குள்ளமான வானரங்கள் கொண்ட ஒரு படை.இதில் ஆயிரம் வானரங்கள். இவை எப்படி போர்புரியும் என்று ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இவை கூட்டமாக சென்று எதிரியின் படைவீரர்கள் மேல் விழுந்து பற்களால் கடித்துக் குதறியும் நகங்களால் பிராண்டியும் போரிடும். போருக்குப்…

Read More

திருப்பதி மலையில் இருந்து இறங்கி வந்து அந்த பெருமாளே உங்கள் பண கஷ்டத்தை தீர்த்து வைப்பார். இந்த 1 பொருளின் வாசம் உங்கள் வீட்டில் நிறைவாக இருந்தால். எவ்வளவு பெரிய பெரிய பண கஷ்டத்தை கூட சுலபமாக ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து வைக்கக்கூடிய வல்லமை கொண்டவர் தான் பெருமாள். அவருடைய கடைக்கண் பார்வை நம் மீது விழுந்து விட்டால் போதும். பொன் பொருள் சொத்து சுகம் அனைத்தும் நம்மை தேடி வந்துவிடும். எந்த ரூபத்தில் அதிர்ஷ்ட காற்று நமக்கு வீசிது என்று நமக்கே தெரியாது. ஆனால் வறுமை பின்வாசல் பக்கம் சென்று இருக்கும். மகாலட்சுமி முன் வாசல் பக்கமாக வீட்டிற்குள் வந்து கொண்டே இருப்பாள். அந்த பெருமாளின் ஆசிர்வாதத்தை வாங்க தினம் தினம் நாம் பெருமாள் வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும். பெருமாள் வழிபாட்டில் அதிகப்படியாக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பொருள் என்றால் அது பச்சை கற்பூரம். பெருமாள் கோவிலில் பெருமாளுக்காக…

Read More

நல்ல நடவடிக்கை District Collector, Thanjavur பேருந்தை மட்டும் பறிமுதல் செய்வது பயன் இல்லை இந்த குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட ஓட்டுநர் நடத்துநர் உரிமையாளர் தண்டிக்க பட வேண்டும் ஏன் என்றால் இது விபத்து அல்ல திட்ட மிட்ட வன்முறை … ஒரு 8 ஆண்டுகளுக்கு முன் குழந்தை ஏசு கோவில் அருகே போக்குவரத்து விதியை மீறி எதிர் திசையில் வந்த தனியார் பேருந்து மோதி ஒரு அம்மா இறந்தார் குழந்தை படுகாயம் அடைந்தார், அது விபத்து அல்ல கொலை ஆனால் அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஓட்டுநர் திட்டமிட்டே தங்கள் வருமானத்திற்காக தவறான திசையில் வந்து ஒருவரை படுகாயம் அடைய செய்து மற்றொருவரை கொலை செய்தவர் ஆனால் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை , இதனால் அது போன்ற தனியார் பேருந்துகள் மற்றும் ஒட்டுநர்கள் மீண்டும் பணிக்கு வந்து அதே தவறை மீண்டும் செய்கிறார்கள் இது இனியும் வேண்டாம் ஓட்டுநர்களுக்கு, நடத்துனர்கள்…

Read More