Author: Karthick

Course Overview SOLIDWORKS is powerful 3D CADD software that helps in shortening the design cycle and increases productivity. SOLIDWORKS is the world’s leading product design software that facilitates us to deliver innovative solutions to the engineering or technical industries. Dynamic Cad offers the best classroom training in India that helps the learner to get in-depth knowledge of various tools and features available in the Solidworks software. Being a 2D and 3D parametric modeler, SOLIDWORKS is essential to most engineering and drafting systems. Dynamic Cad provides software training on a wide range of courses in the field of CAD, CAM &…

Read More

திருச்சியில் 2 நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தஞ்சை மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கால்பந்து போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ள பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகளுக்கு தமிழ்நாடு அணி தேர்வு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி கால்பந்து விளையாட்டிற்கான மாணவ, மாணவிகளுக்கு தேர்வு சென்னையில் நடைபெற இருந்தது மழையின் காரணமாக இந்த தேர்வு போட்டிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில கால்பந்து விளையாட்டு தேர்வு போட்டிகள் நாளை (வியாழக்கிழமை) மாணவிகளுக்கும், நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) மாணவர்களுக்கும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தேவைப்படும் ஆவணங்கள் இதற்கான வயது வரம்பு 1-1-2004 அன்று அல்லது அதற்கு பின் பிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளாக இருத்தல் வேண்டும். இதில்…

Read More

One of the major concerns of Indian Medical students while trying to gain admission to a good medical institution is the exorbitant donation fee demanded by private universities. Vaagai Educare helps students to gain admission to reputed colleges abroad at an affordable fee. Here are some of the reasons why learning MBBS abroad is one of the best choices ever: Globally recognized degree with advanced technological learning in medicine Institutions connected with well-reputed hospitals to facilitate clinical rotations. High passing percentile in the M.D. program, NExT / FMGE and USMLE. AAIMS, BCM, DMSFI & UV Gullas recognized by WHO &…

Read More

தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரி விடுதியில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் செம்மொழி நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவிகளின் கல்வி அறிவு மற்றும் பொது அறிவை வளா்க்கவும், அரசு வேலைவாய்ப்பைப் பெறும் வகையில் பொது அறிவை மேம்படுத்திக் கொள்ள மாணவிகளுக்கு உதவிடும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 259 கல்லூரி விடுதிகளில் செம்மொழி நூலகங்களைத் திறக்க தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்படி, தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கல்லூரியில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் ஆகியோா் தங்கியுள்ள 4 விடுதிக் கட்டடங்களிலும் தலா ரூ. 1 லட்சத்தில் செம்மொழி நூலகங்கள் அமைக்கப்பட்டன. இதையடுத்து சனிக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமை வகித்தாா். தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நூலகங்களைத் திறந்து வைத்து, மாணவிகளிடம் நூல்களை வழங்கினாா். விழாவில்…

Read More

வங்காளதேசத்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இஷன் கிஷன் இரட்டை சதமும், விராட் கோலி சதமும் அடித்து அசத்தினர். மும்பை, இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையே மிர்புரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 ரன் வித்தியாசத்திலும் வங்காளதேச அணி ‘திரில்’ வெற்றி பெற்று தொடரை சொந்தமாக்கியது. இந்த நிலையில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 8 பந்தில் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான இளம் வீரர் இஷான்…

Read More

இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை, பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, அலிசா ஹீலி தலைமையிலான உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மும்பை டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது

Read More

திருச்சி மாநகரில் மொத்தம் 9.1 கிமீ நீளத்திற்கு 3 உயர்த்தப்பட்ட பாலங்கள் வருகிறது.(சிவப்பு கோட்டில் குறிக்கப்பட்டுள்ளன) போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 3 பாலங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. காவிரி பாலம் முதல் மல்லாச்சிபுரம் அண்ணா சிலை முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு தலைமை தபால் நிலையம் முதல் புத்தூர்

Read More

தஞ்சையில் வருகிற 13-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை நீதிமன்ற சாலையில் அமைந்துள்ள நகர துணை மின் நிலையத்தில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள், மின்பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் கீழ்கண்ட மின்வழித்தடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. ஸ்டேடியம் மின் வழித்தடத்தில் மேம்பாலம், சிவாஜிநகர், சீதாநகர், சீனிவாசபுரம், ராஜன்ரோடு, தென்றல்நகர், கிரிரோடு, காமராஜ்ரோடு, ஆபிரகாம்பண்டிதர் நகர். திலகர்திடல் வழித்தடத்தில் மேலவீதி, தெற்கு வீதி, பெரிய கோவில், செக்கடி ரோடு, மேலஅலங்கம். வண்டிக்காரத்தெரு- மார்க்கெட் வண்டிக்காரத்தெரு வழித்தடத்தில் ரெயிலடி, சாந்தப்பிள்ளைகேட், மகர்நோன்புச்சாவடி, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வி.பி.கோவில், சேவியர் நகர், சோழன்நகர். சர்க்யூட்ஹவுஸ் வழித்தடத்தில் கல்லணைக்கல்வாய்ரோடு, திவான்நகர், சின்னையாபாளையம், மிஷன்சர்ச்ரோடு, ஜோதிநகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர். மார்க்கெட்…

Read More

தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சராசரியான 1098 மி.மீ. மழை அளவை தாண்டி பெய்துள்ளது. இதுவரை 1108 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தஞ்சை மாவட்டத்தில் மழை வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கிய மழை தொடர்ந்து ஒருவாரம் பெய்தது. அதன் பின்னர் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தற்போது மாண்டஸ் புயல் காரணமாகவும் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் அவ்வப்போது லேசான தூறல் காணப்பட்டது. ஆனால் வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. மாலையில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. சராசரி மழை அளவு தஞ்சை மாவட்டத்தில் ஆண்டு சராசரியாக 1098.21 மி.மீ. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தென்மேற்கு பருவமழை மூலம் 318.19 மி.மீட்டரும், வடகிழக்கு பருவமழை மூலம் 637 மி.மீட்டரும் மழை…

Read More

தஞ்சாவூர் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர். நாகநாதசுவாமி கோவில் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடந்தது. விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது. அப்போது பஞ்ச மூர்த்திகள் சிறப்பு புஷ்பலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. சுகாதார பணிகள் இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி. செழியன் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி தலைவர் ஜோதி தாமரைச்செல்வன், பேரூராட்சி நிர்வாக அதிகாரி வி. சிவலிங்கம், துணைத்தலைவர் உதயாஉப்பிலி, ஆர். பாலா உள்ளிட்ட பேரூராட்சி கவுன்சிலர்கள், முன்னாள் பேரூராட்சி…

Read More