Author: Karthick

தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் பூச்சந்தையைத் தொடா்ந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா். தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பூக்காரத் தெரு வியாபாரிகள், பொதுமக்கள் அளித்த மனு: தஞ்சாவூா் பூக்காரத் தெருவில் அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடத்தில் பூச்சந்தை 100 ஆண்டுகளைக் கடந்து இயங்கி வருகிறது. இதை நம்பி 500-க்கும் அதிகமான குடும்பங்கள் பூ கட்டி பிழைப்பு நடத்தி வருகிறோம். இதில் வியாபாரிகள் சிலா், சில காரணங்களுக்காக வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனா். அவா்களை மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்து வந்து, அதே இடத்தில் கடை நடத்தவும், வியாபாரிகளுக்குள் இணக்கமான உறவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள அனைத்து குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, இந்தப் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அஞ்சலகத்தில்…

Read More

22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த கால்பந்து திருவிழாவில் நேற்றிரவு லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் அரங்கேறிய மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்களின் ஒட்டுமொத்த பார்வையையும் தன்னகத்தே ஈர்த்த இந்த இறுதியுத்தம் முதல் வினாடியில் இருந்தே விறுவிறுப்பாக நகர்ந்தது. தொடக்கத்தில் அர்ஜென்டினா அணியின் கையே ஓங்கியது. அட்டகாசமான தற்காப்பு வளையத்தை உருவாக்கி எதிராளிகளிடம் பந்து அதிகம் செல்லாதவாறு பார்த்துக் கொண்ட அர்ஜென்டினா அணியினர் அடிக்கடி பிரான்சின் கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்தனர். ஒரு சில ஷாட்டுகள் தடுக்கப்பட்டன. 19-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஜிரூட் நீண்ட தூரத்தில் இருந்து தலையால் முட்டிய பந்து கம்பத்திற்கு மேலாக பறந்தது. முதல் பாதியில் 2 கோல் 23-வது நிமிடத்தில் அர்ஜென்டினா முதல்…

Read More

ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். சென்னை, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை நடத்தி வருகிறார். கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி தொடங்கிய இந்த யாத்திரை 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். டெல்லியில் வரும் 24 ஆம் தேதி நடைபெற உள்ள பாதயாத்திரையில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது என கேப்டன் கே.எல்.ராகுல் கூறினார். சாட்டிங்காம், இந்திய அணி வங்காளதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடேயேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 14 ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்திய அனி 404 ரன்னும், வங்காளதேச அணி 150 ரன்னும் குவித்தது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 513 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த வங்காளதேச அணி 4ம் நாள் ஆட்ட நேர…

Read More

இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதின பெங்களூரு, பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா – வங்காளதேச அணிகள் மோதின இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது. பின்னர் 279 என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2012,2017 ,2022 என 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது.

Read More

மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 4-வது முறையாக பிரான்ஸ் அணி இறுதிசுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. தோகா, 22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்நிலையில் பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியின் 5-வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்து ரசிகர்களை பரவசமடையச் செய்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் இரு அணிகளுக்கும் இடையே அனல் பறந்தது. இந்த சூழலில் ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான…

Read More

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பு குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம். 2.66 கோடி நுகர்வோரில் 11 மணி நிலவரப்படி இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்வாரியம் மூலம் வரும் வருவாய் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்புக்கு அவகாசத்தை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்கப்படும். ஆதார் மின் இணைப்பு சிறப்பு முகாம்கள் டிச., 25 மட்டும் அரசு விடுமுறை காரணமாக செயல்படாது. மின் ஊழியர்கள் ஸ்ரைக் குறித்து அமைச்சர்…

Read More

அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன படைகள் மோதலில் ஈடுபட்டன. இதில், இரு தரப்பிலும் காயம் ஏற்பட்டது. இட்டாநகர், இந்தியா – சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி இந்திய – சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இந்த மோதலுக்கு பின் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வைத்துள்ளன. அதன் பின் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு லடாக்கின் ரின்சன் லா பகுதியிலும் இந்திய – சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியா – சீன படைகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் இரு படைகளும் மோதிக்கொண்டுள்ளன. அருணாச்சலபிரதேசத்தின் தவாங்…

Read More

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோஷியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றது. தோகா, கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று, கால்இறுதி முடிவில் இப்போது அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், குரோஷியா, மொராக்கோ ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியனான அர்ஜென்டினா அணி, குரோஷியாவுடன் மோதியது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் மல்லுக்கட்டியதால் களத்தில் சூடுதெறித்தது. இதன்படி பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி போட்டியின் 34-வது நிமிடத்தில் தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து சக அணி வீரர் ஜூலியன் அல்வாரஸ் போட்டியின் 39-வது நிமிடத்தில்…

Read More

மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது. தஞ்சாவூர் மத்திய அரசின் காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று தொடங்குகிறது. இலவச பயிற்சி வகுப்பு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசு அறிவிக்கும் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய பணியாளர் தேர்வு வாரியத்தால் இளநிலை செயலக உதவியாளர், பிரிவு எழுத்தர், டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட 4500 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை படிப்பு தரம் தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இத்தேர்விற்கான வயது…

Read More