தஞ்சை பெரிய கோவில் பார்க்கிங் தென்மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்தவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு மேம்பாலம் வழியாக வரும் போது தூரத்தில் உள்ள இந்த சிறிய அறிவிப்பு பலகை பலருக்கும் தெரியும்படியாக இல்லாததால் இடது பக்கம் திரும்பி சோழன் சிலை வந்து யு டர்ன் எடுத்து மறுபடி பார்க்கிங் பகுதிக்கு வருகின்றனர்.கொஞ்சம் பெரிதாக மேம்பாலம் இறக்கத்தில் வரும் போதே தெரியும் படியாக வைப்பார்களா தஞ்சை மாநகராட்சி.
Author: Karthick
மாண்புமிகு பிரதமர் Narendra Modi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்து கேட்டுக் கொண்டார்.
ஜோடிகளே உஷார்..! தனியார் விடுதியில் ரகசிய கேமரா-வசமாக சிக்கிய ஊழியர்! உதகை தனியார் விடுதியில் ரகசிய கேமரா.வசமாக சிக்கிய ஓட்டல் ஊழியர். ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி..? நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்திருப்பதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பெண்களை வீடியோ எடுத்த ஊழியர்.. ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நேற்று கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த சாஹத் தனது மனைவியுடன் தனியார் விடுதி ஒன்றில் தங்கி இருக்கிறார், அப்போது அவர்கள் தங்கியுள்ள அறையின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து மசினகுடி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலிசார் நடத்திய விசாரணையில் கழிவறையில் ரகசிய கேமரா வைத்தது…
கேமராவை தூக்கி ஸ்டாலின் அதகளம்! போட்டோகிராபர்கள் குதூகலம்! இன்று உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, தனது இல்லத்தில் புகைப்படக் கலைஞர்களை படம் எடுத்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நினைவுகளை காட்சிப் பேழைகளாக உறையவைப்பவை புகைப்படங்கள். உலக புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. லூயிஸ் டகுரே என்பவர் புகைப்பட செயல்முறையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியதை நினைவுகூறும் வகையில் உலக புகைப்பட தினம் 1837ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டுஇந்த நாளில் சிறந்த புகைப்படங்கள் போற்றப்படுகின்றன. புகைப்பட கலைஞர்கள் பாராட்டப் படுகிறார்கள். கருப்பு வெள்ளை புகைப்படங்கள் முதல் டிஜிட்டல் வரை இன்று நாம் புகைப்படங்களை விரும்பும் விதத்தில் மாற்றிக்கொள்ளும் தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டன. காலத்தை உறையவைக்கும் கலைஞர்களான புகைப்படக் கலைஞர்களைக் கொண்டாடும் நாளாக இன்றைய தினம் இருக்கிறது.இந்நிலையில், இன்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் இல்லத்தில் ஊடக செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது வெளியே வந்த முதலமைச்சர் ஸ்டாலின், புகைப்படக்…
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி ( FDFS) 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், சேலம் மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது. மதுரையில் சிறைக்கைதிகள் வேடம் அணிந்து ஜெயிலர் படம் பார்க்க ரசிகர்கள் வந்தனர். கர்நாடகாவில் காலை 6 மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி வெளியானது. ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல்…
அதிர்ச்சி… நடிகர் பிரகாஷ் ராஜ் வந்ததால் கல்லூரி வளாகத்தை கோமியத்தால் சுத்தம் செய்த மாணவர்கள்! தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது இந்நிலையில். கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியதில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தியேட்டர் வசனம், சினிமா, சமூகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இது பற்றி அறிந்த மாணவர்களில் சிலர் கல்லூரிக்கு தொடர்பில்லாத தனியார் நிகழ்ச்சியை எப்படி கல்லூரி வளாகத்திற்குள் நடத்தலாம் என கேள்வி எழுப்பியதோடு, நடிகர் பிரகாஷ் ராஜிக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் கல்லூரிக்கு வரக்கூடாது எனக்கூறினர். இதனையடுத்து, கல்லூரி வளாகம் முன் திரண்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து அங்கு…
27-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி இந்தப் படம் திரை அரங்குகளில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம். கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்துள்ள கடைசி திரைப்படம். 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தச் சூழலில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி…
ஏசி காரில் செல்பவர்கள் கவனத்திற்கு… வாடகை காரில் செல்வோரும் கவனமாக இருங்கள்…. இது ஒரு டிரைவர் சொல்ல கேட்டது உங்களுக்காக நண்பர்களே…. 🌹🌹🌹 வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும். இதை ஆஃப் செய்துள்ள போது வெளியில் இருந்து காற்றை எடுத்து குளிரூட்டும். நாம் வாகனம் செலுத்தும் போது வெளியில் இருந்து காற்றை எடுப்பதால் குளிரூட்டுவது சற்று குறைவாக இருப்பதாலும் வெளியில் இருந்து வேறுவித வாசனைகள் உள்ளே வருவதாலும் அநேகமாக எல்லோரும் காருக்குள்ளேயே இருக்கும் காற்றை குளிரூட்டும் (Internal cooling) பட்டனை ஆன் நிலையிலேயே வைத்திருப்போம். ஆனால் நீண்டதூரம் பயணம் செய்யும் போதோ அல்லது நிறைய நபர்கள் பயணம் செய்யும் போதோ உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும் சந்தர்ப்பத்தில் உள்ளே ஆக்ஸிஜன் அளவு குறைந்து நம் சுவாசம் காரணமாக கார்பன்டை…
தஞ்சை நாஞ்சிகோட்டை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே சாலையில் மெதுவாக சாலை விதிகளின் படி முறையாக தனது 2 மகள்களுடன் ஓட்டி வந்த நபரின் வாகனத்தில் அதிவேகமாக தவறான திசையில் வந்து மோதிய இளைஞர்…. மேலும் தனது வாகனத்தின் கண்ணாடி உடைந்து விட்டது என்று அந்த இளைஞர் , சரியாக போக்குவரத்து விதி படி முறையாக வந்த நபரை தனது இரு சிறிய மகளுடன் விழுந்த அந்த நபரை தாக்கினார்… பாவம் இந்த இரண்டு இரு பிள்ளைகள் கீழே விழுந்து அடிபட்டதுடன் தனது அப்பாவை அடிப்பதை பார்த்து கதறி கொண்டு இருந்தார்கள் … நல்ல வேளையாக சுற்றி இருப்பவர்கள் அந்த திமிர் பிடித்த நபரை தள்ளி கொண்டு சென்றனர் … தவறும் செய்து விட்டு பெண்பிள்ளைகள் உடன் வேதனையில் இருந்த நபரை தாக்கும் மன நோயாளிகளை என்ன செய்வது 😭 மாவட்ட நிர்வாகத்திற்கும் , காவல் துறைக்கு வேண்டுகோள் தஞ்சையில் போக்குவரத்து…
தஞ்சை No 1 வல்லம் சாலையில் விட்டு வசதி வாரிய பகுதியில் உள்ள வட்டானம் ( Roundabout) அருகே free left எடுக்கும் அந்த முக்கிய பகுதில் சாலையை அடைத்துக்கொண்டு சாலையில் கிட்ட தட்ட 30 நிமிடங்களுக்கு மேல் ஒரு கல்லூரி பேருந்து நின்று மாணவர்களை ஏற்றிக் கொண்டு இருக்கிறது , மேலும் அந்த பேருந்தில் பின் புறம் கண்ணாடி இல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் உள்ளது அந்த கல்லூரி மீதும், பேருந்து ஓட்டுனர் மீது தகுந்த நடவடிக்கை தேவை District Collector, Thanjavur