Site icon Thanjavur News

At Thanjavur Corner, Anumar Temple hosts a special Diwali worship service.

தஞ்சை மூலை அனுமார் கோவிலில் வருகிற 24-ந்தேதி தீபாவளி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. 25-ந்தேதி சூரிய கிரகண பாலாபிஷேகம் நடைபெறுகிறது.

தீபாவளி சிறப்பு வழிபாடு தஞ்சை மேலவீதியில் அமைந்துள்ள மூலை அனுமார் கோவில் மிகவும் புகழ்பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு அமாவாசை அன்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகின்றன.

அதன்படி வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது.

மாலை ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு 6 மணிக்கு மூலை அனுமாருக்கு ஜாங்கிரிகளால் ஆன சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. அதனையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனை நடைபெறுகிறது.

சூரிய கிரகணம் பாம்பு (ராகு/கேது) சூரிய மற்றும் சந்திரனை நோக்கி கவ்வி பிடிக்கும் சிற்பங்கள் மூலை அனுமார் கோவிலில் உள்ளது.இதன் கீழ் நின்று மூலை அனுமாரை தரிசனம் செய்தால் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தால் பிடிக்கும் தோஷங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகம்.

வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணத்தை முன்னிட்டு இரவு 7.30மணிக்கு சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் பரிகாரம் அர்ச்சனை நடைபெறுகிறது. அப்போது சித்திரை, விசாகம், திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மூலை அனுமாரை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது ஆகும்.

வெற்றிலை மாலை மூலை அனுமாருக்கு பக்தர்கள் வெற்றிலை மாலை சாற்றி வழிபடும் பக்தர்கள் தங்களது வெற்றிலை மாலையை திரும்ப பெற்று அதில் உள்ள வெற்றிலையை ஒவ்வொன்றாக கழற்றி தனித்தனியாக எடுத்து வெற்றிலையுடன் வாழைப்பழத்துடன் சேர்த்து பசுமாடுக்கு கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோவிலில் ஒவ்வொரு சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் முடிந்த உடன் மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது. ஏற்பாடுகள் இந்த சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகிறார்கள்.

Exit mobile version