Site icon Thanjavur News

Adani Group shares may fall further. Do you know why? See what the experts say!

அதானி குழுமத்திற்கு இது போறாத காலம் என்றே கூறலாம். அதானி குழுமத்தின் மீது ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது பல குற்றச்சாட்டுகளை சுமத்திய நிலையில், அடுத்தடுத்து பல பிரச்சனைகளை அதானி குழுமம் எதிர்கொண்டு வருகின்றது.

குறிப்பாக அதானி குழுமத்தின் சில பங்குகளின் தர மதிப்பினை மூடீஸ் நிறுவனம் ஸ்டேபிள் என்ற நிலையில் இருந்து, நெகட்டிவ் ஆக தரமிறக்கியுள்ளது.

அதானி பங்குகள் சரிவு

இந்த அறிவிப்புக்கு பிறகு அதானி குழும பங்குகள் பலவும் கடும் சரிவினைக் கண்டுள்ளன. குறிப்பாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது 7% சரிவினைக் கண்டும், அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் 5% மேலாக சரிவினைக் கண்டும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 5% குறைந்தும் சரிவிலும் காணப்படுகின்றது.

மற்ற அதானி பங்குகளும் சரிவு

அதானி கிரீன் எனர்ஜி 5% சரிவினைக் கண்டும், அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலையானது 5% சரிவினையும், அதானி வில்மர் பங்கு விலையானது 5% சரிவிலும், ஏசிசி சிமெண்ட் பங்கு விலையானது 4% சரிவிலும், அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 6% சரிவிலும், அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது 5% சரிவிலும், எண்டிடிவி பங்கு விலையானது 5% சரிவிலும் காணப்படுகின்றது.

வருவாய் சரிவு

இதனை இன்னும் மோசமாக்கும் விதமாக அதானி குழுமத்தின் வருவாய் விகிதம் மற்றும் லாபம் குறித்தான அறிக்கையினை நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. இதில் அதானி குழுமத்தின் வருவாய் விகிதமானது 15 – 20% வரையில் அடுத்த ஆண்டு சரியலாம் என கணித்துள்ளது. இது முன்னதாக கணிக்கப்பட்ட வருவாய் விகிதத்தில் இருந்து 40% சரிவினைக் காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

MSCI அமைப்பு

மூடீஸ் நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி மற்றும் மூன்று நிறுவனங்களின் மதிப்பீட்டினை குறைத்துள்ள நிலையில், அதன் சந்தை மதிப்பும் சரிவினைக் கண்டுள்ளது.

இதுமட்டும் அல்ல, MSCI அமைப்பு அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், ஏசிசி லிமிடெட் உட்பட 4 அதானி குரூப் நிறுவனங்களின் ப்ரீ ப்ளோட் வெயிட்டேஜ் குறைப்பதாக அறிவித்துள்ளது. இது பிப்ரவரி 28ல் இருந்து அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதானி நிறுவங்கள் மீது ஆய்வு

செபி உள்ளிட்ட இந்திய நிதி அமைப்புகளும் அதானி குழும நிறுவனங்களை கண்காணித்து வருவதாகவும், குறிப்பாக அதானி குழும நிறுவனம் அதன் பங்கு உரிமை பங்கு வெளியீட்டினை ரத்து செய்துள்ளது. இதற்கிடையில் தான் நிதி நிறுவனங்களும் அதானி பங்குகளின் அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் சில தினங்களுக்கு முன்பு தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தொடரும் சரிவு

இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் அதானி குழும நிறுவனங்கள் மீண்டும் கடும் சரிவினைக் கண்டுள்ளன. இது இனியும் தொடரலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு 120 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

Exit mobile version