Site icon Thanjavur News

A Traffic Park in Thanjavur Explaining the Rules of the Road to Boys!

தஞ்சை மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ரூ.1050 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்ட தஞ்சை பழைய பஸ் நிலையம், திருவையாறு பஸ்நிறுத்தத்தில் உள்ள வணிக வளாகம், அய்யன்குளம், சாமந்தான்குளம் உள்ளிட்டவற்றில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டன.

மேலும் சிவகங்கை பூங்கா பராமரிப்பு, அகழிகள் சீரமைப்பு, குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள், சாலை பணிகள், விளையாட்டு அரங்கம் அமைத்தல், பெத்தண்ணன் கலையரங்கம் சீரமைத்தல், சோலார் மின் வசதி, எல்.இ.டி. விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டபல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

போக்குவரத்து பூங்கா

இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் செலவில் போக்குவரத்து பூங்கா (டிராபிக் பார்க்) அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலம் அருகே போலீஸ் துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 35 ஆயிரம் சதுரஅடிஅடி பரப்பளவில் இந்த பூங்கா அமைக்கப்படுகிறது.

இதற்காக தற்போது மைதானம் முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளே நடைபாதை, போக்குவரத்து சிக்னல் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகர வாழ் மக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு சாலை போக்குவரத்து தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு முறைகளை மிக எளிய முறையில் பயிற்றுவிக்கும் நோக்குடன் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version