தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவில், அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலின் மூலஸ்தான மாரியம்மன் புற்றுமண்ணால் உருவானது. இதனால் மூலஸ்தான அம்மனுக்கு பூக்களை தவிர வேறு எந்தவித அபிஷேகமும் செய்யப்படுவதில்லை.
மாரியம்மன்கோவில் கிராமமக்கள் சார்பில் ஆண்டுதோறும் புஷ்பாபிஷேக பெருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான புஷ்பாபிஷேக பெருவிழா நேற்று நடந்தது. கிராமமக்கள் பூக்கூடைகள், பூத்தட்டுகளை எடுத்து கொண்டு சிவன்கோவிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.
பின்னர் மகாமாரியம்மனுக்கு புஷ்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் இதில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாரியம்மன்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், நித்திய வழிபாட்டுக்குழு செயலாளர் சாவித்திரி மகாலிங்கம், சிவராத்திரி கமிட்டி தலைவர் சரவணவேல், புஷ்பாபிஷேக பெருவிழா விழாக்குழு நிர்வாகிகள் கார்த்திகேயன், வேணு.கண்ணன் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.