Site icon Thanjavur News

A Minibus crashed near Balaji Nagar in Thanjavur after the Driver lost control.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி செல்வதற்கு சென்று கொண்டிருந்த V.முருகையா என்கிற மினி பேருந்து தஞ்சை பாலாஜி நகர் டிவிஎஸ் ஷோரூம் அருகே செல்லும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு சிறுவன் ஒரு பெண் உட்பட்ட இருவருக்கும் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு வருகிறார். மேலும் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார், தஞ்சை மின்சார வாரியத்திற்கு சொந்தமான போஸ்ட் மரம் ஒன்று மினி பஸ் மோதியதில் நான்கு தூண்டாகி கீழே விழுந்து கிடக்கிறது.

விபத்துக்கான காரணம் ஏன் நடந்தது எப்படி நடந்தது என போக்குவரத்து காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version