அருட்தந்தை, ஓஷோ
ஞான சிந்தனைகளிலிருந்து….
அருட்தந்தை :
காமம் என்றாலே அது ஏதோ பாவம் போல
நாம் Mind Tune up செய்யப்பட்டிருக்கிறோம்.
இயற்கை உபாதையால் வரும் மற்ற உடற்கழிவுகளை போல, உற்பத்தியாகும்
விந்து நாதமும் தேவைக்கு மேல் வெளியேற்ற வேண்டியதே…
உடலின் தேவைக்கு மேல் அது இருப்பானால், அதை வெளியேற்ற உணர்வுகள் போடும் தாளமே காம இச்சை உணர்வுகள்.
இதை முறையாக சமன் செய்யவே திருமணம் என்ற பந்தம் ஆண் பெண் பாலரிடையே.
சமன் செய்யவில்லை எனில், நமது சிந்தனை தடத்தையே மாற்றி தவறான எண்ணங்களால் நம் வாழ்வையே
சிதைத்து விடும்.
உடலின் இயற்கையான ஆரோக்கியமும் தடம் புரளும்.அதீத காமம், தேவைக்கு மேல் உயிர் சக்தி செலவானால், தொலைந்தது வாழ்வு.
ஓஷோ :
Masturbation எனப்படும் சுய இன்பமும்,
சமன் செய்ய தோழமை இல்லாததால்
நிகழும் இயற்கைக்கு மாறான செயலே.
காமம் இல்லாத இயற்கை
இருக்குமானால்,ஜீவராசிகள்
பல பாலினமாக பாிணமித்திருக்காது.
காமம் துரத்தவில்லை.நம் மனம் சமுதாய கட்டுப்பாட்டுக்குஅஞ்சி ஒடுகிறது.
இயற்கையின் இயல்பை கட்டுபடுத்தவோ கட்டிவைக்கவோ இயலாத ஒன்று.
காமம் அழகிய உணர்வு,தவிர்க்க முடியாத ஒன்று.அதை வீாியபடுத்துவதும் வெறுப்பதும் தான் தேவையற்ற செயல்.
நம் குணங்களின் இயல்பை அதன்
தழுவலில் தவழ்வதே சிறப்பு.
சிறப்பந்தஸ்து இருப்பதாக நம்மை நாமே ஏமாற்றி கொள்வதைதவிா்த்து,இயற்கையின் இசைவில் இசைந்தால் எல்லாம் அதுவாகவே நிகழ்வதை உணரலாம்