தஞ்சாவூர் கிருஷ்ணஜெயந்தியையொட்டி தஞ்சை நவநீத கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவநீதகிருஷ்ணன் கோவில் தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் உள்ளது. ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராக நவநீத கிருஷ்ணன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 7.30 மணிக்கு பல்வேறு திரவியங்களால் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு அர்ச்சனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வெண்ணெய்தாழி அலங்காரம் இன்று (சனிக்கிழமை) திருமஞ்சனம், தொட்டில் உற்சவமும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெண்ணெய்தாழி அலங்காரமும், உறியடி உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல் தஞ்சை கரந்தையில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. சிறுவர்கள் கிருஷ்ணன் வேடம் தஞ்சை மானம்புச்சாவடியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பாலகிருஷ்ணன் பிரகார உலா நடைபெற்றது. இதையடுத்து பெண்களின் கோலாட்டம் நடந்தது.
சிறுவர்கள் கிருஷ்ணன் வேடம் அணிந்தும், சிறுமிகள் ராதை வேடம் அணிந்தும் வந்தனர். இதேபோல் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களில் திருமஞ்சனம் நடைபெற்றது.
1 Comment
THANKS FOR INFORMACTION