Site icon Thanjavur News

10 statues Recovered From Abroad Handed Over in Kumbakonam Court

கடந்த பல ஆண்டுகளாக புகழ்பெற்ற கோவில்களில் இருந்து திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட புராதன சிலைகள் குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்நிலையில் கடந்த பல வருடங்களாக அமெரிக்கா, ஆஸ்திரேலிய அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த 8 உலோக சிலை மற்றும் 2 கற்சிலை இந்தியா கொண்டு வரப்பட்டு டெல்லியில் உள்ள மத்திய தொல்பொருள் துறை வசம் ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில், மீட்கப்பட்ட 10 சிலைகளையும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம், மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி ஒப்படைத்தார். இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பரண்டு ராஜாராம், நடராஜன் ஆகியோர் அந்த சிலைகளை டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக 3-ம் தேதி சென்னை கொண்டு வந்தனர்.

பின்னர் பலத்த பாதுகாப்புடன் கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு 4-ந்தேதி கொண்டு வரப்பட்டன. சிலைகள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்த சிலைகளாக இருப்பதாலும், பல கோடி மதிப்புள்ள சிலைகளாக உள்ளதாலும் இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் அலுவலகத்திலிருந்து, கூடுதல் துணை சூப்பிரண்டுகள் அசோக் நடராஜன், மலைச்சாமி, ராஜாராம், சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன், இன்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்பட்டக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரனை செய்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி டி.சண்முகப்பிரியா, கருங்கல்லினாலான சிலைகளையும், உலோக சிலைகளையும் பார்வையிட்டார். பின்னர், கருங்கல்லினாலான சிலைகளை தென்காசி மாவட்டம், அத்தாளநல்லூர், மூன்றீஸ்வரர்முடையார் கோவிலிலும், மீதமுள்ள சிலைகளை கும்பகோணம், நாகேஸ்வரன் கோவிலிலுள்ள உலோக திருமேனி பாதுகாப்பு மையத்திலும் வைக்க உத்தரவிட்டார்

Exit mobile version